IPL 2018: சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி!
IPL 2018 தொடரின் 28-வது போட்டியில் ஐதராபாத் அணி 11 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் 28-வது போட்டியில் ஐதராபாத் அணி 11 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 28-வது போட்டியில் இன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய சிகர் தவான் 6(4) ரன்களில் வெளியேற மற்றொரு வீரர் அலெக்ஸ் நிதானமாக விளையாடி 45(39) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் வில்லியம்ஸ் 63(43) ரன்களில் வெளியேறினார். இவர்களை அடுத்து களமிறங்கிய வீரரகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்சர் 3 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கௌதம் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 4(5) ரன்களில் வெளியேற, அணித்தலைவர் ரஹானே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவருக்கு உருதுணையாக சஞ்சு சாம்சன் 43(30) நிதானமாக களத்தில் நின்றார் எனினும் இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் ராஜஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே குவித்தது. எனவே 11 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் அணி தரப்பில் அணி தலைவர் ரஹானே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 65(53) ரன்களுடன் களத்தில் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில் சித்தார் 2 விக்கெட்டுகளை குவித்தார்.
இந்த வெற்றியினை அடுத்து ஐதராபாத் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் சென்னையினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது!