IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் 13 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.


முதலில் பேட்டிங்செய்த கொல்கத்தா ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. 


டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தரப்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் மற்றும் டிரண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  


இதனையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளம் இறங்கியது.


ஆரம்பம் முதலே தடுமாறிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 14. 2 ஓவரில் 129 ரன்னில் டெல்லி அணி ஆல் ஆவுட் ஆனது.


இதன் காரணமாக டெல்லி அணியால் 129 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.


அதிக பட்சமாக குல்தீப் யாதவ், சுனில் நரைன் தலா 3 விக்கெட்டுகளும் இதர பவுலர்கள் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 


இதன் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.