IPL-ல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, கடந்த 1-ம் தேதி அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்கள்.


இதில், அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தினர். இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியது. 


அப்போது, அப்போது சிஎஸ்கே பனியன் போட்டு வந்த இளைஞர்களையும் ஒருசில காவலர்களையும் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, காவலர்கல் அவரை தேடும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இந்த நிலையில், சேப்பாக்கத்தில் ஐபிஎல் போராட்டத்தின்போது காவலரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த  மதன்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்ட மதன்குமார் எண்ணூரை சேர்ந்தவராவார். 


இவரை கைது செய்த காவல் துறையினர் இவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு வழக்கில், அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.