காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையா அவர்கள் போட்டியிடும் பதாமி தொகுதியை சேர்ந்த கிருஷ்ணா ஹிரிடேஜில் வருமான வரி சோதனை நடத்ததப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.



ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


இதற்கிடையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆவனங்கள் இன்றி பதுக்கிவைக்கப்படும் பண முடிச்சுகளும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையா அவர்கள் போட்டியிடும் பதாமி தொகுதி கிருஷ்ணா ஹிரிடேஜில் வருமான வரி சோதனை நடத்ததப்பட்டுள்ளது.


கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையா அவர்கள் சாமுண்டேஸ்வரி மற்றும் பதாமி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இந்த கிருஷ்ணா ஹிரிடேஜில் தங்கியதாக கூறப்படுகிறது. இவர்களை குறிவைத்தே இந்த வருமாண வரி சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது!