"ஏக் தோ தீன்" பாடலை யாரும் எளிதில் மறக்க முடியாது.  என். சந்தரா இயக்கத்தில் 1988-ம் ஆண்டு அனில் கபூர் மற்றும் மாதுரி தீட்சித் நடிப்பில் வெளியான படம் "தேஜாப்". இந்த படத்தில் "ஏக் தோ தீன்" என்ற பாடலுக்கு நடிகை மாதுரி தீட்சித் ஆடிய நடனம் மிகவும் பிரபலமானது. பாலிவுட் படமாக இருந்தாலும், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட அனைவரையும் கவர்ந்தது "ஏக் தோ தீன்" பாடல். இந்த பாடல் மூலம் மாதுரி தீட்சித் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது "ஏக் தோ தீன்" பாடலின் ரீமேக் ‘பாக்ஹி 2’ படத்திற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தில், இந்த பாடலுக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆடியிருக்கிறார். இந்த பாடலின் ஒன்றரை நிமிடப் பாடல் வீடியோ யு-டூப்பில் வெளியிடப்பட்டது. 


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. நடிகை மாதுரி தீட்சித் போல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கும் இந்த பாடல் திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


‘பாக்ஹி 2’ படத்தின் டைகர் ஷெரப் ஜோடியாக தீஷா படானி படிக்கிறார். மேலும் மனோஜ் பாஜ்பாயி மற்றும் ரண்தீப் ஹூடா நடித்துள்ளனர்.


வீடியோ:-