கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி வீடியோக்க்களை தட்டு எறிந்து வருகிறார். அதில் நானும் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


தற்போது மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இவர் நடித்து வருகிறார். அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதைத்தவிர இவர் உத்தமி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், டிவிட்டரில் ஜுலி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருக்கும் பக்கத்தில் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, நீங்களும் ஜுலியுடன் அரசியலில் இறங்கினால் உங்களை நாங்கள் முதலமைச்சர் ஆக்குவோம் என்று பதிவு செய்துள்ளனர்.


இதற்கு பதில் அளித்து மறு டிவிட் செய்துள்ள நடிகை கஸ்தூரி,,! தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.