கர்நாட்டகாவில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய 2 பேர் கைது!
கர்நாடக மாநிலம் கல்புராகி காலால் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 103லி மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்!
கர்நாடக மாநிலம் கல்புராகி காலால் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 103லி மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது கடந்த மார்ச்., 29 ஆம் நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகத-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புராகியில், சட்விரோதமாக கடத்தப்பட்ட 103லி மதுபானங்களை கலால் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மனுபானங்களை கடத்த முயன்ற TATA-Ace வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது!