நீட் தேர்வில் 720-க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) CBSE நடத்தியது.


தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ், இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 6-ம் தேதி நடந்து முடிந்தது.


மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். 


இந்நிலையில் முன்னதாக நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டபடும் என  தெரிவித்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வில், 720-க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.  


இவர், இயற்பியலில் 180 மதிப்பெண்களுக்கு 171 மதிப்பெண்ணும், வேதியியலில் 180 மதிப்பெண்களுக்கு 160 மதிப்பெண்ணும், உயிரியல் மற்றும் விலங்கியலில் 360 மதிப்பெண்களுக்கு 360 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்! 


மேலும், ஓசி. பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்துள்ளனர்!