கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


எனவே, ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் துவங்குவதாக தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், தற்போது கர்நாடக பாஜக வேட்பாளர்களிடம் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசினார்..!


அப்போது அவர் கூறும்போது, 
 
வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றார். 


தொடர்ந்து அவர், பொய்யான வாக்குறுதிகளை கூறி குறிப்பிட்ட சமுதாய மக்களை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது என்றார். 


சாதி வழியில் அரசியல் செய்பவர்கள் வளர்ச்சியை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.