உழலுக்கு எதிராக பேசும் மோடி ஜி, தனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற எடியூரப்பாவை நிறுத்தியது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை இப்படிதான் -வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்


வரும் மே 12-ம் தேதி 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனால பாஜக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பொது கூட்டங்களில் தங்கள் கட்சி ஆதரவாக பேசி வருகின்றனர்.


#Karnataka: ஏழைகள் குறித்து கவலை கொள்ளாத காங்கிரஸ்: மோடி பாய்ச்சல்!!


இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "கர்நாடகாவின் மோஸ்ட் வாண்டட்" என்ற தலைப்பில், கேள்வி எழுப்பியுள்ளார். அதில் ஒரு வீடியோவும் இணைந்துள்ளார்.


அவர் கூறியது:- பிரதமர் மோடி அவர்களே நீங்கள் நிறைய பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் நடவடிக்கைகள் உங்கள் வார்த்தைகளுக்கு பொருந்தவில்லை எனக் கூறியுள்ளார். 


வீடியோவில் கூறப்பட்டதாவது:-


23 வழக்குகளை எதிர்க்கொண்ட பி. எஸ். எடியூரப்பா பாஜகவின் முதல் அமைச்சர் வேட்பாளர். ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற எடியூரப்பாவை கர்நாடக முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தியது ஏன்? ஊழல் கும்பலான ரெட்டி சகோதரர்களுக்கு எட்டு சீட் ஒதுக்கியது ஏன்? உங்கள் வேட்பாளர்களில் 11 பேர் ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். இதைப்பற்றி 5 நிமிடம் நீங்கள் ஏன் பேசக்கூடாது. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்" என்று ராகுல் காந்தி வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.