ஜம்மு காஷ்மீரின் புதிய துணை முதல்வராக பா.ஜ.கவின் கவிந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரில் உள்ள கத்வா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்ட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என கூறப்படுவர்களுக்கு ஆதரவாக சில பா.ஜ.கவினர் பேரணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சவுத்ரி கலந்த், சந்தர் பிரகாஷ்சிங் ஆகியோர் ரஜினாமா செய்தனர். 


இதனை தொடர்ந்து அம்மாநில அமைச்சரவை 30-ம் தேதி மாற்றி அமைக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங் நேற்று பதவி விலகினார். கட்சயின் விருப்பத்தின் பேரில் தான் இந்த முடிவை எடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய துணை முதல்வராக பா.ஜ.கவின் கவிந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரின் சட்டசபை சபாநாயகராக இருந்தவர். 



இந்நிலையில் பதவி விலகி நிர்மல் சிங் சட்டசபை சபாநாயகராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மொஹமட் அஸ்ரஃப் மிர், சுனில் குமார் ஷர்மா, ராஜீவ் ஜஸ்ரோடியியா, டிவீந்தர் குமார் மினல் மற்றும் சக்தி ராஜ் ஆகியோர் அம்மாநில அமைச்சர்களாக பதவிஎர்கின்ற்றனர்.