சக மாணவியை கட்டிப்பிடித்ததன் காரணமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் தற்போது 91.2% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் திருவணந்தபுரத்தில் இருக்கும் St தாமஸ் சென்ரல் பள்ளியில் கடந்தாண்டு 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர் ப்ரமான். கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளியல் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக மாணவியை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். சுமார் 5 நிமிடங்களுக்கு அப்பெண்னை அவர் கட்டிப்பிடித்ததாக குற்றம்சாட்டி பள்ளி நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.


இதனால் அவர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூரின் சிபாரிசின் பேரில் அம்மாணவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பள்ளியில் சேர்ந்து தேர்வு எழுதினார்.


நேற்று நாடுமுழுவதும் CBSE தேர்வு முடிவுகள் வெளியானது. இம்முடிவுகளின் படி குற்றம்சாட்டப்பட்ட மாணவர் 91.2% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்களின் பட்டியல் பின்வருமாரு.


  • ஆங்கிலம் 87,

  • பொருளியல் 99,

  • வணிகவியல் 90,

  • கணக்குப்பதிவியல் 88 மற்றும்

  • உலவியல் 92 என மதிப்பெண் பெற்றுள்ளார்.


ஓழுங்கு நடவடிக்கை என்ற பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.