செல்போன்களில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்தாண்டு இருசக்கர வாகனத்தில் இருவர் செல்போனில் பேசியபடி சென்றனர். இதனையடுத்து அம்மாநில காவல்துறை அவர்களுக்கு அபராதம் விதித்தனர். 


இந்த நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஷபீக், சோமராஜன் அமர்வு விசாரித்தது.


விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கேரள காவல்துறை சட்டத்தின் 118 இ பிரிவின் படி வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டுவதும், பிறருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுவதும் தான் தண்டனைக்கு உரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.


இச்சட்டப் பிரிவின் எந்த இடத்திலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டினால் பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, அச்சுறுத்தல் ஏற்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் கேரள காவல்துறை சட்டத்தின்படி செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்களை தண்டிக்க இயலாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மோட்டார் வாகன பயணத்தின் போது செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்க கூட சட்டத்தில் இடமில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.