சென்னை கொருக்குப்பேட்டை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜோசப். இவர் காசிமேடு மீன்பிடி துறைமுக பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜோசப்பின் உடலை மீட்டனர். 


பின்னர் அவரது உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்ககாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இவரது இரப்பிர்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை, பணிச்சுமை காரணமாக இவல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. 


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் சொந்த பிரச்சணை காரணமாக இவர் தற்கொலை செய்துக்கொண்டாரா, இல்லை பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார என்பது குறித்து ஆராயும் கோணத்தில் விசாரணை நடைப்பெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!