விரைவில் பஞ்சாப் அரசு 1.2 இலட்சம் காலி பணியிடங்களை அறிவிக்க உள்ளது -முழு விவரம்
பஞ்சாப் மாநில அரசாங்கம் விரைவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களில் இளைஞர்களை பணி அமர்த்த போகிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக விரைவில் காங்கிரஸ் அரசு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை அறிவிக்க உள்ளது. பஞ்சாப் மாநில அரசாங்கம் விரைவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களில் இளைஞர்களை பணி அமர்த்த போகிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.
மாநில அரசின் துறைகளான மருத்துவம் துறை, ஆரோக்கிய துறை மற்றும் ஆராய்ச்சி துறை மற்றும் பல துறைகளில் காலியாக உள்ள இடங்களை கல்வியின் அடிப்படியில் நிரப்ப நடவடிக்கையை பஞ்சாப் அரசு எடுத்து வருகிறது. இதற்காக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், உயர்மட்ட கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளை ஏற்ப்படுத்தவும், அதற்கான முழுமையான கட்டமைப்பை தயார் செய்ய வேண்டும் என மாநில முதல்வர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், வீட்டுக்கு வீட்டு வேலைவாய்ப்பு வணிக பணி திட்டத்தின் கீழ் உடனடியாக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேப்டன் அமர்சிந்தர் சிங் கூறியுள்ளார். வீட்டுக்கு வீட்டு வேலைவாய்ப்பு மற்றும் வணிகப் பணிகள் மூலம் இதுவரை 4.53 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு, திறமை மற்றும் தகுதிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நீக்குவற்காக திறமை மேம்பாட்டு பணி மற்றும் பயிற்சி துறை போன்றவற்றின் சிறந்த ஒருங்கிணைப்பு தேவை என்பதையும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, அரைகுறை திறமையானவர்களும் மற்றும் திறமையற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.