10 வயது பேரன், தனது பாட்டியைப் பார்க்க 2,800 கி.மீ தூரம் கடந்து சென்றான் என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சிலர், ஆனந்த கண்ணீர் விட்டால், பலர் தனக்கு இப்படி ஒரு பாசக்கார பேரன் இல்லையே என்று ஏங்குகிறார்கள்.  
இந்த சிறிய வயதிலேயே இலக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைந்த சிறுவன் ரோமியோ, பாட்டியை சந்திப்பதற்கு முன்பு தடுப்புக் காவலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வெறும் வார்த்தைகளால் இந்த அதிசயத்தையும், அபூர்வ சிறுவனையும் அடக்கிவிட முடியாது. இந்த பத்து வயது சிறுவன் லாக்டவுனின் போது பாட்டியை பார்ப்பதற்காக, 2,800 கி.மீ. தொலைவுக்கான தனது லட்சிய நடைப் பயணத்தை தொடங்கினான்.  தொடங்கியது. இப்போது சிறுவன் தனது இலக்கை அடைந்துவிட்டான்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மியோ காக்ஸ் என்ற 10 வயது சிறுவனின் சாதனை இது. ஜூன் மாதத்தில் தன் தந்தை Phil உடன் பாட்டியை பார்க்க கிளம்பினான் சிறுவன் ரோமியோ. இத்தாலியின் சிசிலி, பலேர்மோவில் (Palermo)வில் இருந்து தந்தையும் மகனும் கிளம்பினார்கள்.  
இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் வழியாக நடந்தே சென்றார்கள். நீண்ட பயணத்தை மேற்கொண்ட அப்பாவும் மகனும் செப்டம்பர் 21 அன்று இங்கிலாந்திற்குள் சென்றுவிட்டனர். இந்த நீண்ட பயணத்திற்கு பிறகும் கூட, ரோமியோவால் தனது பாட்டியைப் பார்க்க முடியவில்லை. 



கொரோனா காலம், கொடுங்காலமாக இருக்கிறதே! கொரோனா பரவலும், தாக்கமும் அதிகமாக இருப்பதால் தானே, தனது தந்தையுடன் இவ்வளவு நீண்ட நடைப் பயணத்தை மேற்கொண்டான் ரோமியோ. எனவே, அப்பாவும், மகனும் தற்போது தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில், பேரன் தனது அன்பான பாட்டியை சந்திப்பான் என்றால், மகன், தனது அம்மாவை சந்திப்பார்.
கொரோனாவா இருந்தாலும் சரி, என் பாட்டியை பார்த்தே தான் தீருவேன் என்ற ரோமியோவின் பாசம் அனைவருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Read Also | அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆன்லைன் வாக்கெடுப்பை அதிகரித்த மாடல் அழகியின் Instagram பதிவு


இந்த நீண்ட பயணத்தின் போது, அப்பாவும், பிள்ளையும், கொரோனாவின் அச்சத்தை மட்டுமல்ல, பல்வேறு குணமுடைய மனிதர்கள், காட்டு நாய்கள் உட்பட பல்வேறு பல ஆபத்தான உயிரினங்களையும் கடந்து பிழைத்து வந்திருக்கின்றனர். ஆனால் பாட்டியைப் பார்த்து அவரது மடியில் படுத்து மகிழ்ச்சியை அனுபவிப்பது தான் ரோமியோவின் விருப்பமாம்!
டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற தமிழ் திரைப்பட பாடல் அந்த சிறுவனுக்கு தெரியுமோ என்னவோ? ரோமியோ என்றாலே அன்பால் உருகுபவர் என்ற அடைமொழியை பெற்ற அந்த காலத்து ஏற்கனவே உலகின் முன் பதிய வைத்துவிட்டார்.  


Also Read | October 05: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; நோபல் பரிசு முதல் அஜர்பைஜன் வரை...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR