Relationship Tamil News : கடிதம் மூலம் காதலை வெளிப்படுத்திய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இந்த சூழலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் காதலிக்கு காதலன் ரகசியமாக எழுதிய காதல் கடிதம் இப்போது கிடைத்துள்ளது. அதுவும், காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவருக்கு தெரியாமல் தன்னை வந்து சந்திக்குமாறு அவர் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் ஒரு பெண்ணின் கழிவறையில் கிடைத்துள்ளது. ஆம், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கழிவறை இடிந்து விழுந்தபோது அதில் ஒரு பேப்பர் இருப்பதை எடுத்து பார்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆசியாவின் பணக்கார கிராமம் இந்தியாவில் தான் இருக்குது


அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என படித்தபோது, அவருக்கு விஷயம் புரிந்திருக்கிறது. ஆம், அது காதல் கடிதம் என்றும், 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்பதும் அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும், அந்த கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என அவர் படித்தபோது, இன்னும் வியப்பு கூடியிருக்கிறது. முன்னாள் காதலன், வேறொருவருடன் திருமணமான காதலிக்கு ரகசியமாக கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தன்னை வந்து சந்திக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனை படித்துப் பார்த்த அந்த பெண் பழைய காதல் கடிதத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


அந்த காதல் கடிதத்தை எழுதியவரின் பெயர் ரொனால்ட் ஹப்குட். அவர் இப்படி அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார், " என் அன்பே, நீ என்னுடைய அன்புக்கும், பாசத்துக்குரிய செல்லம். தினமும் காலையில் வந்து என்னை சந்திக்க முயற்சி செய்வாயா?. ஆனால் யாரிடமும் சொல்லாதே பாஃபி. நீங்கள் திருமணமான பெண் என்பதால் இது நமக்குள் ரகசியமாக இருக்க வேண்டும். நீங்கள் என்னை சந்திப்பது யாருக்காவது தெரிந்தால் பிரச்சனை ஏற்படும். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நள்ளிரவு என்றால் ஃபுல்வுட் டிராம் கார்னரில் என்னைச் சந்திக்கவும். தினமும் என்னைச் சந்திக்கவும். உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையுள்ள, ரொனால்ட்." 


இந்த கடிதத்தை வெளியிட்ட பெண்ணின் வீடு 1917 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், ஆனால் கடந்த மே மாதத்தில் தான் அங்கு குடியேறியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். அதனால், முன்பு இங்கு வாழ்ந்தவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், 100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் காதலிக்கு காதலன் எழுதிய அந்த காதல் கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ