நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..

Actress Nayanthara Beauty Secrets : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நயன்தாரா. ஒரு பதிவில் இவரே தனது அழகிற்கான ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். அது என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2024, 05:06 PM IST
  • நயன்தாராவின் அழகு ரகசியம்
  • சாப்பிடும் உணவு குறித்து பேசுகிறார்
  • என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்.. title=

Actress Nayanthara Beauty Secrets : கோலிவுட்டில், கடந்த 18 ஆண்டுகளாக டாப் நடிகையாக விளங்கி வருபவர், நயன்தாரா. 39 வயதானாலும், இன்னும் இளமையுடனும் பொலிவுடனும் இருக்கும் இவரை, பலருக்கும் பிடிக்கும். பொதுவாகவே, நடிகைகள் அனைவரும் தங்களது அழகிலும் உடல் நலனிலும் அக்கறை காட்டுவது அவசியமாக பார்க்கப்படுகிறது. அவர்கள், உடலுக்கு என்ன செய்து கொண்டாலும், மனதில் இருந்து உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதும் மிகவும் அவசியம் ஆகும். நயன்தாராவும், தனது அழகை பாதுகாத்து கொள்வதற்காக சில முயற்சிகளை செய்து வருகிறார். அவை என்னென்ன தெரியுமா? 

நயன்தாரா, தனது பதிவில் அழகுக்கான ரகசியம் குறித்து குற்ப்பிடுகையில் “அன்பையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை” என்று கூறியிருக்கிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

உடலின் பேச்சை கேளுங்கள்..

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு, ஒரு நல்ல உணவு அவசியம். குறிப்பாக என்னைப் போன்ற ஒரு நடிகைக்கு ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏற்றவாறு, அந்த அழகு சிறப்பானதாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வது என்பது பாலன்ஸ், சீரான நிலைத்தன்மை, உடலின் சொல் பேச்சை கேட்பது என்பவை ஆகும்.  

டயட்:

‘டயட்’ என்றால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதும், நான் விரும்பாதவற்றைச் சாப்பிடுவதும்தான் என்று நான் நினைத்தேன். இப்போது, ​​சத்தான மற்றும் சுவையான வீட்டில் சமைத்த உணவுகளை ரசித்து சாப்பிடுகிறேன். இதை, எந்த குற்ற உணர்வும் இன்றி மகிழ்ச்சியாக சாப்பிடுகிறேன், இதனால் துரித உணவுகள் மீதும் ஆசை வருவதில்லை. இது நான் உணவைப் பார்க்கும் விதத்தை மாற்றிவிட்டது. இப்போது ஊட்டச்சத்துடனும், ஆற்றலுடனும், உண்மையான மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

உணவு பழக்கம்..

நாம் சாப்பிடுவது, நமது ஒட்டுமொத்த வாழ்வையும் பாதிக்கும் என்று நான் நம்புகிறேன். எனது இந்த பயணத்தைப் பகிர்வது மூலமாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க உங்களை ஊக்குவிக்கும் என்றும் உங்களுக்கு உதவவும் என்றும் நம்புகிறேன். எனது பரபரப்பான நாட்களைக் கடந்து செல்லும் விஷயங்களை வரும் சில வாரங்களில் பகிர்ந்து கொள்கிறேன். நாம் நன்றாக சாப்பிடுவதாலும், உணவுடன் நல்ல உறவைப் பேணுவதாலும் கிடைக்கும் மகிழ்ச்சியிலும் ஊட்டச்சத்திலும் கவனம் செலுத்துவோம். 

இவ்வாறு, நயன்தாரா தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “நாம் தட்டில் சாப்பாட்டு தட்டில் எதை வைக்கிறோமோ அதை வாழ்விலும் வைத்துக்கொள்கிறோம். ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்” என்று அதில் கூறியிருக்கிறார். மொத்தத்தில் ஆரோக்கியமான வீட்டு உணவு தன் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம் என கூறியிருக்கிறார் நயன்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..

சரும பராமரிப்பு:

நடிகை நயன்தாரா தனது பளபள சருமத்திற்காகவும் பிரத்யேக கேரை எடுத்துக்கொள்கிறார். தன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் இல்லாமல் செல்ல மாட்டாராம். இது, அவரது சருமத்தை பாதிப்படைய செய்யாமல் வைத்துக்கொள்கிறதாம். 

நீர்ச்சத்து:

உடல் ஆரோக்கியமாக இருக்க, நயன் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்கிறார். தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது, பழச்சாறுகள் அருந்துவதால் இவரிடம் இருந்து முகப்பருக்கள் விலகியே இருக்கிறதாம்.

ஹேர் கேர்:

நயன்தாரா, தனது கேசத்தையும் பிரத்யேகமாக பாதுகாத்து வருகிறார். இவரது அடர்த்தியான மற்றும் அழகான முடிக்கு காரணம் தேங்காய் எண்ணெய் என கூறப்படுகிறது. இது மட்டுமன்றி, இவர் நல்ல பிராண்ட் பொறுந்திய ஷாம்பூ மற்றும் கண்டீஷனர்களை தனது முடிக்காக உபயோகிக்கிறார். 

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News