எகிப்து நாட்டில் கொரோனா ஊரடங்கால், பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு, 12 வயது சிறுமி ஒருவர் அவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் காரணமாக, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சித்தது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அப்படி, பள்ளி சென்று படிக்க முடியாத சிறுவர்களுக்கு, 12 வயது சிறுமி ஒருவர் பாடம் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


கொரோனா பரவலால் (coronavirus pandemic) எகிப்து (Egypt) பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கெய்ரோவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்மிடாவில், ரீம் எல்-கெளலி (Reem El-Khouly) என்ற 12 வயது சிறுமி எடுத்த முயற்சி தான், தற்போது அவரை உலகம் முழுவதும் பிரபலம் ஆக்கி உள்ளது. 12 வயது சிறுமியான ரீம், சுமார் 30 குழந்தைகளுக்கு கற்பித்து, பலருக்கு உத்வேகம் அளித்துள்ளார்.


இதுகுறித்து ரீம் கூறுகையில், ‘‘தெருக்களில் (street) விளையாடுவதற்கு பதில், பாடம் கற்றுத்தந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அதன்படி, காலையில் எழுத்து பிரார்த்தனை செய்த பின், அவர்களுக்கு வகுப்பு எடுக்க துவங்குகிறேன். அரபு, கணக்கு, ஆங்கிலப் (Arabic, mathematics, religion) பாடங்களை அவர்களுக்கு கற்பிக்கிறேன்’ என்று கூறினார்.


ALSO READ | தனது மனைவியின் மோதிரத்தை திருடி காதலிக்கு பரிசாக வழங்கிய கலாப காதலன்!


முதலில், நோட்புக் மூலம் ரீம் பாடம் எடுக்க துவங்கியிருக்கிறார். பின் கரும்பலகையில் எடுத்திருக்கிறார். இவரது சேவை குறித்து கேள்விப்பட்ட உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று, தற்போது அவருக்கு ஒரு வெள்ளை போர்டையும், மார்க்கர்களையும் வழங்கியிருக்கிறது. ரீம் தனது மாணவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.


அவரிடம் படிக்கும் 9 வயதான முகமது அப்தெல் மோனீம் (Mohamed Abdel Moneim) என்பவர் கூறுகையில், ‘பள்ளிகள் மூடப்பட்டதும், பள்ளியில் நாங்கள் கற்றுக்கொண்டதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ரீம் எங்களுக்கு பாடம் எடுக்க தொடங்கினார். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். எளிமையாக புரியும் வகையில் அவர் நடத்தும் அரபு, கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் நான் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது’ என்றார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR