சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்தசாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.


சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.


இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


1. 8 தோட்டாக்கள்
2. அறம்
3. கடுகு
4. குரங்கு பொம்மை
5. மாநகரம்
6. மகளிர் மட்டும்
7. மனுசங்கடா
8. ஒரு கிடாயின் கருணை மனு
9. ஒரு குப்பை கதை
10. தரமணி
11. துப்பறிவாளன்
12. விக்ரம் வேதா


மேலும் இந்த ஆண்டு திரையிடப்படும் இந்தியன் பனோரமா 12 படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


சிறப்பு திரையிடல் தமிழ்ப் படமாக "என் மகன் மகிழ்வன்" (My Son is Gay) படம் திரையிடப்படுகிறது.