7th Pay Commission மாஸ் அப்டேட்: ஊழியர்களுக்கு இரட்டை குட் நியூஸ்
7th Pay Commission: அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தினால், அவர்களின் ஊதியத்தில் மாபெரும் ஏற்றம் இருக்கும்.
7 ஆவது ஊதியக்குழு சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் முதன்மையாக, மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு இரண்டு பரிசுகளை வழங்கப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அகவிலைப்படி அதிகரிப்புடன் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கப்போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தினால், அவர்களின் ஊதியத்தில் மாபெரும் ஏற்றம் இருக்கும். இதற்கான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடலாம் என நம்பப்படுகிறது. எனினும், இதுவரை அரசாங்கம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், மே மாத நடுப்பகுதியில் இந்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என சில ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மோடி அரசு விரைவில் 4 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, டிஏ 46% ஆக அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் சீரான ஒரு ஏற்றம் இருக்கும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர். 7வது ஊதியக் குழுவின்படி, ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட டிஏ விகிதங்கள் ஜனவரி மற்றும் ஜூலை முதல் அமல்படுத்தப்படுகின்றன. இப்போது அடுத்து ஏற்படவுள்ள அகவிலைப்படி அதிகரிப்பு விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் பொருந்தும் என்று கருதப்படும். சில நாட்களுக்கு முன்பு அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இதன் விகிதங்கள் ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான செய்தி: ஊழியர்களின் ஊதியம் 44% உயரும்
ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அரசு அறிவிக்கப் போகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் ஊதியம் பெருமளவு அதிகரிக்கும். இது பற்றிய விவாதம் வேகமாக நடந்து வருகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால் அதன் பின்னர் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். அதாவது, அடிப்படை சம்பளம் ரூ.8,000 உயர்த்தப்படும்.
இந்த வழியில் வரும் நாட்களில் அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு என அரசு, தனது ஊழியர்களுக்கு இரண்டு பெரிய பரிசுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னர் அவர்களது ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரிக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 132.7 லிருந்து 133.3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது தற்போதைய 42 சதவீதத்திலிருந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும்.
எனினும், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் இனி வரவுள்ளன. அவை வந்த பிறாகே ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ