விடுமுறை விரும்பிகளுக்கு ஏதுவாக, எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு ஒன்பது நீண்ட விடுமுறைகளுடன் வருகிறது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் ஒரு பயண ஆர்வலராக இருந்தால், அல்லது உங்கள் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் நீங்கள் விலகிச் செல்வதற்கான வழியைக் கண்டால், வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டுவருகிறது. 


2020-ஆம் ஆண்டு ஒன்பது நீண்ட வார இறுதிகளுடன் வருகிறது, இது ஒரு பரபரப்பான கால அட்டவணைக்குப் பிறகு உங்களைப் புத்துயிர் பெற போதுமான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, புதிய பயண நாட்குறிப்பை உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் எதிர்நோக்க வேண்டிய ஒவ்வொரு மாத வார விடுமுறை பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி: மகா சிவராத்திரி பிப்ரவரி 21, வெள்ளியன்று வருகிறது. பலருக்கு இந்த நாள் விருப்பமான விடுமுறையாக இருக்கலாம். இந்த நாளில் நீங்கள் நீண்ட விடுமுறையாக மாற்ற விரும்பினால் வெள்ளிகிழமை தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு அன்றும் விடுப்பு எடுத்து நீண்ட ஓய்வு பெறலாம்.


மார்ச்: ஹோலியைச் சுற்றி மார்ச் மாதத்தில் 4 நாள் நீண்ட விடுமுறை வருகிறது. மார்ச் 7 (திங்களன்று) நீங்கள் விடுப்பு எடுத்தால், மார்ச் 7 முதல் 10 வரை ஒரு நீண்ட வார விடுமுறை கிடைக்கும்.


ஏப்ரல்: ஏப்ரல் மாதத்தில், மூன்று நாள் கொண்டதொரு நீண்ட விடுப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது ஏப்ரல் 6-ஆம் தேதி வரும் மகாவீர் ஜெயந்தியுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு எடுத்தால் மூன்று நாட்கள் தொடர்ந்து ஓய்வெடுக்கலாம்.


அதேவேளையில், ஏப்ரல் 10 முதல் 14 வரை மற்றொரு நீண்ட விடுப்பு கிடைக்கிறது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரும் புனித வெள்ளியுடன், ஏப்ரல் 13-ஆம் தேதி பைசாக்கியும், ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியும் வருகிறது. இதன் மூலம் மூன்று விடுமுறை நாட்களுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை எடுத்துக் கொண்டால் ஐந்து நாள் கொண்ட நீண்ட விடுப்பு கிடைக்கிறது.


மே: மே 22-25 ஒரு நீண்ட விடுமுறை நாட்களைக் குறிக்கிறது, மே 22 (வெள்ளிக்கிழமை) ஜமாத் உல்-விதா, அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு, மற்றும் மே 25 திங்கள் அன்று ஈத்-உல்-பித்ர். ஆக நான்கு நாட்கள் கொண்ட நீண்ட விடுமுறை கிடைக்கிறது.


ஜூலை-ஆகஸ்ட்: ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை பயணத்திற்கு செல்ல ஒரு சாளரத்தை வழங்குகிறது. ஜூலை 31 பக்ரி ஈத் பண்டிகையினை குறிக்கிறது. அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு, மற்றும் திங்களன்று ரக்ஷா பந்தனின் விடுமுறை. ஆக நான்கு நாட்கள் கொண்ட நீண்டு ஒரு விடுமுறை கிடைக்கிறது.


ஆகஸ்ட்: சுழற்சியில் இன்னொன்று நீண்ட விடுமுறை நமக்கு கிடைக்கிறது. அதாவது ஆகஸ்ட் 29-31 வரை. ஆகஸ்ட் 31, திங்கட்கிழமை ஓனமின் விடுப்பை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதை வார இறுதி நாட்களில் இணைத்து மூன்று நாட்கள் கொண்ட நீண்ட விடுமுறை பெறலாம்.


நவம்பர்: இந்தியாவில் பண்டிகை காலம் நவம்பரில் தொடங்குகிறது. தீபாவளி நவம்பர் 14 (சனிக்கிழமை) அன்று குறிக்கிறது. இதற்கு முன்னதாக திந்தேராஸ் (வியாழக்கிழமை) மற்றும் சோதி தீபாவளி (வெள்ளிக்கிழமை), சனி தொடர்ந்து ஞாயிறு, திங்களன்று பாய் தூஜ் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும்.


டிசம்பர்: அடுத்த ஆண்டு கிறிஸ்மஸைச் சுற்றி மற்றொரு நீண்ட விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது. டிசம்பர் 25 (கிறிஸ்மஸ்) வெள்ளிக்கிழமையாக இருப்பதால், வார இறுதி நாட்களுடன் சேர்த்து மூன்று நாள் நீண்ட விடுப்பினை நீங்கள் எடுக்கலாம்.


இதனிடையே வருத்தம் அளிக்கும் விஷயமாக, ஆகஸ்டில் கணேஷ் சதுர்த்தியும் அக்டோபரில் தசேராவும் வார இறுதி விடுமுறை நாட்களில் வருகின்றன.