7th Pay Commission: அடி தூள்... டிஏ மட்டுமல்ல.. இன்னும் 3 அலவன்ஸ்களில் ஏற்றம் இருக்கும்
7th Pay Commission: அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரிக்கும்போது மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை 2023 முதல் அதன் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள்.
7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு மீண்டும் உயர்த்த உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். அகவிலைப்படி உயர்வு மூலம், பணியாளர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களது ஊதியத்தில் பெரும் உயர்வு காணப்படும். கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மொத்தம் 42 சதவிகிதமாக அதிகரித்தது. தற்போது மார்ச் மாத ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி அதிகரிப்பிலும் 4 சதவிகித ஏற்றம் இருக்கும் என ஊகிக்கப்படுகின்றது.
அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரிக்கும்போது மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை 2023 முதல் அதன் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். என்னும், இது தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
பிஎஃப் மற்றும் கிராச்சுட்டி ஆகியவை அதிகரிக்கும்
ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு அதிகரிக்கக்கூடும் கொடுப்பனவுகளில் பயணப்படி (டிஏ) மற்றும் நகர அலவன்ஸ் (சிட்டி அலவன்ஸ்) ஆகியவை அடங்கும். இது தவிர, அகவிலைப்படி அதிகரிப்பால் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மற்றும் கிராச்சுட்டியும் உயரும். ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவிகிதத்திலிருந்து 46 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பின் விளைவு பயணப்படி (டிஏ) மீதும் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | 7th Pay Commission அதிரடி அப்டேட்: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு
பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஏ அதிகரிப்பால், அவர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் (கிராஜுவிட்டி) அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி ஆகியவற்றின் அடிப்படையில் பிஎஃப் மற்றும் கிராச்சுட்டி கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பால், இந்த கொடுப்பனவுகள் அதிகரிப்பது உறுதி. இந்த மாற்றத்துக்குப் பிறகு, ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களுக்கும் பம்பர் லாபம் இருக்கும். இதன் காரணமாக அவர்களின் அகவிலை நிவாரணமும் மாறும்.
அகவிலை நிவாரணம் 46% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அகவிலை நிவாரணமும் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது அகவிலைப்படியாக கிடைக்கும் கொடுப்பனவு, பணியாளரின் ஓய்வுக்குப் பிறகு, அகவிலை நிவாரணமாக கிடைக்கிறது. அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், அதேபோல், அகவிலை நிவாரணம் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும். செப்டம்பர் மாதம் இந்த அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளிவரக்கூடும். ஆனால், அதிகரிப்பு ஜூலை 1 முதல் கணக்கிடப்படும். எனினும், இது குறித்து இன்னும் அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
ஏஐசிபிஐ தரவு மூலம் வந்த நல்ல செய்தி
ஜூலை மாத அகவிலைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்தச் செய்தி ஊழியர்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு தரவு ஏப்ரல் 28 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
பிப்ரவரியில் இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்ட நிலையில், சரிவுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 2023 இல், ஏஐசிபிஐ எண்ணிக்கையில் ஒரு சரிவு பதிவு செய்யப்பட்டது. தற்போது மார்ச் மாத எண்ணிக்கையில் முன்னேற்றத்திற்குப் பிறகு, அகவிலைப்படி அதிகரிப்பு எதிர்பார்த்தபடி 4 சதவிகிதம் வரை இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசு மறுப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ