கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட் மற்றும் பாரம் ஆகிய 4 தமிழ் படங்கள் இடம்பெறுகிறது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்று கோவா சர்வதேச திரைப்பட விழா. இந்த ஆண்டுக்கான 49-வது சர்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி முதல், 28 ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்றுகிறது. இந்த விலாகில் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள் திரையிடப்படுகிறது. 


இந்திய படங்கள் பிரிவில் 22 சிறந்த இந்திய படங்கள் திரையிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். திரைப்பட போட்டிக்கு வந்த 190 படங்களில் இருந்து, சுமார் 22 திரைப்படங்களை தேர்வு செய்துள்ளனர். ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு, ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட், பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி, செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் ஆகிய 4 படங்கள் தேர்வாகி உள்ளது. 


இந்த முறை நடக்கும் கோவா திரைப்பட விழாவில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞரின் வசனத்தில் வெளியான பராசக்தி படத்தை வெளியிட்டு, அவரை கௌரவிக்க உள்ளனர். அதேபோல மறைந்த திரப்பட நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தையும் இந்த விழாவில் வெளியிட்டு கௌரவிக்கின்றனர்.


பொதுப்பிரிவில் கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்கு படமான மகாநடி (நடிகையர் திலகம்), சல்மான்கான் நடித்த டைகர் ஜிந்தா ஹே, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத், மெக்னா குல்சர் இயக்கிய ராஷி ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.