சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட பலவிதமான அழகு பராமரிப்பு பொருட்களை உபயோகிப்பவரா நீங்கள்..? அப்போது உங்கள் சரும பாதுகாப்பில் நீங்கள் கொஞ்சமாவது அக்கறை கொண்டிருக்கிறீகள் என்று அர்த்தம். ஆனால், நீங்கள் பின்பற்றி வரும் முறை சரியானதுதானா..? அல்லது நம்மையே அறியாமல் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களை சரும பராமரிப்பு என்ற பெயரில் செய்து வருகிறோமா..? நம்மையே அறியாமல் சில முறைகளை பின்பற்றுவதனால் நமது சருமம் பாதிப்படையலாம். இதை தவிர்க்கவே இந்த தொகுப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.டவல் வைத்து முகத்தை துடைப்பது: 


நாம் முகம் கழுவிவிட்டு வந்த உடனே, டவலை வைத்து முகத்தை துடைப்போம். இது, பல வகைகளில் நமது சருமத்தை கெடுத்து விடுமாம். டவலில் உள்ள பாக்டீரியாக்கள் அப்படியே நம் முகத்தில் பரவினால் அவை முகப்பருக்களையும் ஏற்படுத்தும். அதனால் டவலை ஒற்றி எடுத்து ஈரமான முகத்தை அப்படியே ஆற வைத்து பிறகு சன்ஸ்க்ரீன் அல்லது சருமத்திற்கு எப்போதும் உபயோகிக்கும் க்ரீம்களை பயன்படுத்தலாம். 


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அசத்தல் டபுள் ஜாக்பாட்.. ரூ.28,000 போனஸ்! சம்பளம் உயர்வு


2.சரியான வரிசையில் ஸ்கின் கேர் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்: 


நம்மில் பலர் சருமத்திற்காக உபயோகிக்கும் ஸ்கின் கேர் க்ரீம்களை தவறான வரிசையில் உபயோகிப்போம். முதலில் தடவ வேண்டிய க்ரீமை முதலில் தடவ வேண்டும். கடைசியில் எந்த க்ரீம் பூசிக்கொள்ள வேண்டுமோ அதை கடைசியாகத்தான் பூச வேண்டும். அப்படி இல்லை என்றால் எந்த பொருளை முகத்தில் பயன்படுத்தினாலும் எந்த பயனும் இருக்காது. 


3. சன்ஸ்க்ரீன் உபயோகிக்க மறந்து விடுவது:


வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க நம்மில் பலர் சன்ஸ்க்ரீன் உபயோகிப்பது வழக்கம். இதை சருமத்தில் பூச பெரும்பாலானோர் மறப்பதில்லை. ஆனால், வெயிலேயே இருக்கும் வேலை என்றால் நாம் கண்டிப்பாக 2மணி நேரத்திற்கு ஒரு முறை சன்ஸ்க்ரீன் தடவ வேண்டுமாம்.  குறிப்பாக ஹைப்பர் பிக்மென்டேஷன் இருப்போர் தங்களடு சருமத்தை யூவி கதிர்களிடமிருந்து பாதுகாக்க கண்டிப்பாக இதை செய்தே ஆக வேண்டுமாம். சன்ஸ்க்ரீன் நீண்ட நேரம் நிலைக்க, ஸ்டிக் வடிவில் உள்ள சன்ஸ்க்ரீன் அல்லது ஸ்ப்ரே வடிவில் உள்ள சன்ஸ்க்ரீனை உபயோகிக்கலாம். 


4. கையை உபயோகிக்க கூடாது:


நம்மில் பலர் எந்த பொருளையும் முகத்தில் தடவுவதற்கு முன்பு மொத்த கையிலும் அந்த க்ரீமை எடுத்து அப்படியே 5 விரல்களாலும் முகத்தில் தடவுவோம். ஆனால், இப்படி செய்வது உங்கள் க்ரீமையும் வீண் செய்யும் சரியான ரிசல்டையும் கொடுக்காது. ஸ்கின் கேர் பொருட்களுடன் வரும் ஸ்பாச்சுலா அல்லது ஸ்பாஞ்சைதான் முகத்தில் உபயோகிக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் ஒரு விரலை மட்டும் வைத்து சருமத்தில் தடவலாம், ஆனால், அதன் பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். 


5.மேக்-அப்-ஐ துடைத்தல்:


இரவு உறங்க செல்லும் முன்பு, எவ்வளவு நேரம் ஆனாலும் கண்டிப்பாக மேக்-அப்பை முகத்தில் இருந்து துடைக்க வேண்டும். மேக்-அப்பை துடைக்காமல் அப்படியே தூங்க செல்வதால் முகத்தில் உள்ள பல செல்கள் உடைய வாய்ப்புகள் அதிகமாம். முதலில் எண்ணெயை வைத்து முகத்தில் இருக்கும் மேக் அப்பை பஞ்சு அல்லது காட்டன் துணியை வைத்து துடைக்க வேண்டும். இதையடுத்து முகத்தை கழுவ வேண்டும்.


மேலும் படிக்க | உஷார் மக்களே..! தினமும் லேப்டாப் பேக் தூக்கினால் உடலில் பல பிரச்சனைகள் வருமாம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ