உஷார் மக்களே..! தினமும் லேப்டாப் பேக் தூக்கினால் உடலில் பல பிரச்சனைகள் வருமாம்..!

நீங்கள் தினமும் லேப்டாப் பேக்கை முதுகில் தூக்கிக்கொண்டு செல்பவரா..? இதனால் நம் உடலில் பல விதமான பிரச்சனைகள் உண்டாவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 22, 2023, 05:08 PM IST
  • நம்மில் பலர் தினமும் 3 கிலோவுக்கும் அதிகமான பைகளை கொண்டு செல்கிறோம்.
  • இது நம் உடலில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.
  • இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன..?
உஷார் மக்களே..! தினமும் லேப்டாப் பேக் தூக்கினால் உடலில் பல பிரச்சனைகள் வருமாம்..! title=

நம்மில் பலர், தினமும் சுமார் 3 கிலோ கூடுதல் சுமையை தோளில் சுமந்து செல்கிறோம். மடிக்கணினியிலிருந்து அலுவலகத்திற்கு எடுத்து செல்லும் பிற பொருட்கள் உள்பட, ஒரு வழக்கமான அலுவலக பை 3 கிலோவுக்கு அளவிற்கு கனம் மிக்கதாக உள்ளது. இவ்வாறு கனமுள்ள பைகளை தூக்கிக்கொண்டு செல்வது நமக்கு பழகிவிட்ட விஷயமாக தோன்றலாம். ஆனால், இதனால் நம் உடலில் நம்மை அறியாமலேயே சில பாதிப்புகள் ஏற்படுகின்றன.  அவை குறித்த புரிதலும் விழிப்புணர்வும் நமக்கு இருப்பது அவசியம். 

அலுவலக பையின் கனம்:

தினமும் அலுவலகத்திற்கு செல்வோர் ஒரு லேப்டாப், மதிய உணவு பாக், சில அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்கிறோம். இதில், லேப்டாப் மட்டுமே 2 கிலோ அளவிற்கு எடையுடன் இருக்கிறது. பிற பொருட்களை சேர்த்தால் இந்த கிலோ 3 முதல் 3.5 கிலோ வரை கூடுகிறது. அலுவலகத்திற்கு சிலர் பைக் அல்லது காரில் செல்வர். பெரும்பாலானோர் நடந்து செல்வது அல்லது பொது போக்குவரத்தினை உபயோகிக்கின்றனர். இவர்கள், 3 கிலோ எடையுள்ள பேக்குகளை தினமும் தூக்கிக்கொண்டு சில கிலோமீட்டர்கள் பயணிப்பதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்கின்றனர், மருத்துவர்கள். 

மேலும் படிக்க | ரூ.500 நோட்டு.. ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்: வழிகாட்டுதல்கள் வெளிவந்தன

மருத்துவர்களின் எச்சரிக்கை:

தினமும் எடை அதிகமான பைகளை முதுகில் சுமந்தபடி செல்வது உடலில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்கின்றனர், மருத்துவர்கள். அதிக எடை கொண்ட பைகளை சுமப்பது, உங்களது தசை பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பக தோள்பட்டை, கழுத்து மற்றும் பின்பகுதிகள் பெருமளவில் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இது, தசை பிடிப்பு, தசையில் அசௌகரியம் மற்றும் தசை வலி ஆகியவற்றிற்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. 

உடலமைப்பை மாற்றும் ஆபத்து..

தினமும் அதிக எடையுள்ள பைகளை சுமப்பது, நமது உடலமைப்பையே மாற்ற வாய்ப்புள்ளதாக நொய்டா மருத்துவமனையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் கூறுகிறார். முதுகுத்தண்டின் இயற்கையான வலைவையே தினமும் அதிக எடையுள்ள பை தூக்கும் பழக்கம் மாற்றி விடுமாம். இதனால் கூன் விழுவது அல்லது அமரும் போடு உடலமைப்பு மாறுவது போன்றவை ஏற்படும். இதனால் கழுத்து வலி வருவது, தலைவலி வருவது போன்றவை ஏற்படும். பெண்களுக்கு இதனால் கர்பப்பை வாயிலும் வலி ஏற்படுமாம்.  

முதுகுத்தண்டு ஒழுங்கின்மை:

நம்மில் பலர் ஸ்டைலாக லேப்டாப் பேக்கை ஒரு பக்கமாக மாட்டிக்கொண்டு செல்வோம். இது, நமது முதுகுத்தண்டில் ஒழுங்கின்மையை ஏற்படுத்துமாம்.  “எடையின் சீரற்ற விநியோகம், சில நேரங்களில், ஒரு தோளில் ஒரு கனமான பையை எடுத்துச் செல்வதன் மூலம் ஏற்படும், இது, முதுகெலும்பு தவறான அமைப்பு மற்றும் தசை சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இதன் பொருள் சில தசைகள் வலுவடையும் போது மற்றவை பலவீனமடைகின்றன, இது மேலும் நமது உடலமைப்பு பிரச்சினைகள் மற்றும் இடுப்புக்கு மேற்பட்ட பகுதிகளில் வலி ஏற்பட வழிவகுக்கும். கனமான பைகளில் இருந்து வரும் அழுத்தம், மூட்டுகளில் வலி உண்டாக்கும். இது அன்றாட நடவடிக்கைகளை வசதியாகச் செய்யும் உங்கள் திறனைப் பாதிக்கலாம்” என்கின்றனர் மருத்துவர்கள். 

குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் அதிக அளவு எடையுள்ள பைகளை சுமப்பதனால் அவர்கள் வளவதிலேயே பிரச்சனை ஏற்படுமாம். 

இதற்கு மாற்று வழி என்ன..? 

>தேவையான பொருட்களை மட்டும் உங்கள் பைகளில் எடுத்து வைக்கவும். தேவையற்ற பொருட்கள் இருந்தால் உடனடியாக அவற்றை பையில் இருந்து எடுத்து வெளியில் வைக்கவும். 

>தோள்பையை தேர்ந்தெடுப்பதில் அவசியம் வேண்டும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் பைகளை தேர்வு செய்யலாம். 

>உணவு பண்டங்களை தனி பையில் வைத்து கையில் எடுத்து செல்லலாம். 

>இரண்டு பக்கமும் தோள்பைகளை மாட்டிக்கொண்டு நடக்க வேண்டும். 

>பைகளை தூக்கிகொண்டு நடக்க சிரமமாக இருந்தாலும் நிமிர்ந்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முதுகில் கூண் விழாமல் இருக்கும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பம்பர் லாபம்: ரூ. 10,000 வரை மாத பென்ஷன்.. அசத்தல் ஓய்வூதிய திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News