காதல் தோல்வி அனைவருக்கும் இயல்பாக நிகழும் ஒன்று. அந்த தோல்வியை சந்திக்காதவர்களும் இருக்க முடியாது அந்த தோல்வியில் இருந்து மீண்டு வராதவர்களும் இருக்க முடியாது. அப்படி ஏற்படும் தோல்விகளில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதில் சில, இதோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் தோல்வி: 


நம் வாழ்வை அழகாக மாற்றுவதும் காதல்தான், அதே வாழ்வை நரகமாக மாற்றுவதும் காதல்தான். காதலில் விழுந்த புதிதில் நமக்கு ஒரு புரிதல் இருக்கும், இருவரும் பரஸ்பரம் பல விஷயங்களை பரிமாறிக்கொள்ளும் போது நாம் வேறு மனிதராக வளர்ச்சி அடையும், அதே காதல் தோல்வி பெறும் போது உருகுலைந்த-உடைந்த சிலை போல ஆகிவிடுவோம். ஆனால், நம் வாழ்க்கையில் நிகழும் பல விஷயங்களை போல காதல் தோல்வியும் இயற்கையான ஒன்றுதான். இப்படி ஒருவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டால் அவர் பல விஷயங்களை பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா..? 


மேலும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத்... நீங்கள் நினைப்பதை விட மிக மிக விரைவில்..!!


1.காதலின் வடிவங்களை கற்றுகொள்ளலாம்:


நாம் குறிப்பிட்ட ஒரு சில நபர்களை மட்டுமே நெருக்கமானவர்களாக விரும்புவோம். குறிப்பாக அப்படி நெருக்கமானவர்களை காதலர் அல்லது காதலியாக வைத்துக்கொள்வோம். இவர்களுடன் காதல் முறிவு ஏற்பட்டவுடன், அதே போல இருக்கும் இன்னொரு நபரை தேடுவோம். அது அந்த நபரின் கேரக்டராக இருக்கலாம், அல்லது அவரது உடல் அமைப்பாக இருக்கலாம். இவை அனைத்தும் நீங்கள் எந்த வடிவத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. காதல் தோல்விகளில் இருந்து உங்கள் வடிவம் எது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். 


2. உங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்:


காதல் தோல்விகள், நமக்கு இருக்கும் அந்த தனி நபரை தட்டி எழுப்பிவிடும். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் வரை, நாம் ஒரு மனிதரை சார்ந்து இருப்பது போல இருக்கும். எல்லாவற்றிற்கும் அவரிடம் செல்வோம். அந்த உறவு முறியும் போது, கண்டிப்பாக வெறுமையை உணர்வீர்கள். ஆனால், நாளின் இறுதியில் உங்களுக்கு நீங்கள்தான் என்ற நிதர்சனம் புலப்பட்டு விடும். இது, உங்களை நீங்களே ஒரு தனிநபராக வளர்த்துக்கொள்ள உதவும். உங்களது செயல்பாடுகளுக்கு நீங்களே பொருப்பேற்றுக் கொள்ள தொடங்குவீர்கள். உங்களுக்குள் இருக்கும் பல தன்மைகள் வெளிவர தொடங்கும். 


3. உணர்வுபூர்வமாக இருக்க கற்றுக்கொள்வீர்கள்: 


சில சமயங்களில் காதல் முறிவு ஏற்பட்டதற்கு காரணம் நீங்களாக இருப்பீர்கள். நாளாக நாளாக அதற்கான காரணம் உங்களுக்கு புரிய ஆரம்பித்து விடும். சிலர், ஓபனாக பேசாமல் இருப்பதனால் கூட காதல் தோல்வி ஏற்படும். அதிலிருந்து எப்படி நம் உணர்வுகளை வார்த்தைகளாக பேசுவது என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம். அந்த தப்பு இனி நடக்காமலும் பார்த்துக்கொள்ளலாம். 


4. எல்லைகள் அமைத்தல்-உங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்:


காதலில் இருப்பவர்களில் சிலர் தலைகால் புரியாமல் காதல் மட்டுமே செய்து கொண்டிருப்பர். தனது காதலன் அல்லது காதலியிடம் எல்லா விஷயங்களையும் கூற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், உங்களுக்குள் ஒரு வரையரை இருக்க வேண்டும். எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது என்பதில் எல்லைகள் இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதையெல்லாம், காதல் தோல்வி உங்களுக்கு நன்றாகவே கற்றுக்கொடுக்கும். 


5. ஆபத்துகளை உணர்தல்:


ஒருவருடன் இருக்கும் போது அவரது நல்ல குணங்களை கண்டறியும் நாம், அவர்களிடம் கெட்ட குணங்களையும் கண்டறிந்து கொள்வோம். காதலில் இருக்கும் போது நாம் பெரிதாக நம் பார்டனரிடம் இருக்கும் ஆபத்துகளை உணருவதில்லை. அந்த காதல் தோல்விக்கு பிறகு, நாம் இயல்பாகவே உஷாராகி விடுவோம். 


மேலும் படிக்க | மீண்டும் வருகிறதா ரூ. 1000 நோட்டு? RBI அளித்த முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ