5 நிமிடத்தில் வயதான தோற்றத்தை மறைத்து இளமையாக்கும் சூப்பர் டிப்ஸ்
Anti Aging : இரவு வெறும் 5 நிமிடங்களை ஒதுக்கி இந்த ஜெல்லை தடவினால் வயதான தோற்றத்தை மறைத்து, இளமையாக தோற்றத்தை பெறுவீர்கள்.
Anti Aging Tips Latest : மோசமான வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வருவது இயல்பாகிவிட்டது. சருமம் தளர்வடைந்து முகத்தில் சுருக்கங்கள் எல்லாம் தோன்றும்போது, உங்களுக்கு வயதான தோற்றம் ஏற்படும். அதனால் எப்போதும் சரும பராமரிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பகல் நேரத்தில் சருமத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் இரவு நேரத்திலும் தோல் பராமரிப்பை மேற்கொள்ளுங்கள்.
உங்களை இளமையாக்க வேண்டும் என்றால் இரவு தூங்கும் முன் முகத்தில் வைட்டமின் ஈ மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை அப்ளை செய்யுங்கள். உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் முதுமையான தோற்றமும் மறைந்து இளமையாக காட்சியளிப்பீர்கள். வயதான தோற்றத்தை போக்க உதவும் வைட்டமின் ஈ மற்றும் கற்றாழை ஜெல் எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
மேலும் படிக்க | சத்தான இந்த 3 உணவுகளை நீங்கள் 5 நிமிடத்தில் தயார் செய்யலாம்..!
வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் அலோ வேரா ஜெல் மாஸ்க்:
வைட்டமின் ஈ எண்ணெயில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். இவை ஒன்றாக கலந்ததும், இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும்.
சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள்:
தோலுக்கு ஈரப்பதம் கொடுக்கும்: கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் கலவையானது அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை மேம்படுத்துகிறது, கற்றாழையின் நீரேற்றம் பண்புகள் வைட்டமின் E இன் ஈரப்பதமூட்டும் பண்புகளுடன் இணைந்து தோலுக்கு தேவையான ஈரப்பதம் கொடுத்து, வறட்சியைத் தடுக்கிறது.
முதுமையைக் கட்டுப்படுத்துகிறது: கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ இணைந்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இவை முகத்தில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கின்றன. மேலும் தோலின் ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன.
குளிர்ச்சியை வழங்கும்: கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் கலவையானது எரிச்சல், சிவத்தல் மற்றும் வீக்கத்தைத் தணித்து, சருமத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. இதனால் தோல் பளபளப்பாக காட்சியளிக்கும்.
முகத்தை பளபளப்பாக இதையெல்லாம் செய்யும் அதேநேரத்தில் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் எல்லாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ