பணம் இருந்தாலும் இல்லாவிட்டால் வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். உங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அவர்களுக்கு வேறுமாதிரியான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல் மில்லியனராக இருப்பவர்க்ள அனைவருமே மகிழ்ச்சியானவர்களாக இருப்பதில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் சில அடிப்படையான 5 பிரச்சனைகளை இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணம் மீதான மோகம்


மில்லியனர்களாக இருப்பவர்கள் பணம் இருக்கிறதே என மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்களுக்கு அடுத்த பணக்காரனை விட அதிக பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற சிந்தனை அழுத்திக் கொண்டே இருக்கும். உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்க எந்த செயலையும் செய்வார்கள். அன்றாடம் அவர்களின் மார்க்கெட்டை தக்க வைக்க கடும் போராட்டங்களை எதிர்கொள்வார்கள். 


மேலும் படிக்க | ரிஷபம், சிம்மம் உட்பட 4 ராசிகளுக்கு ராஜ யோகம்: புதன், சுக்கிரன் சேர்க்கையால் ஜாக்பாட்


பிரைவசி இருக்காது


பணம் வைத்திருந்தாலே பிரபலமானவர் தான். அவர்கள் நினைக்காவிட்டாலும், சமூகம் அவர்களை பிரபலமானவராகத் தான் பார்க்கும். அதனால் உங்களுக்கான பிரைவசி என்ற ஒன்று இருக்கவே இருக்காது. சொந்த ஊர்களில், சொந்த மாநிலத்தில் விரும்பிய இடத்துக்கு செல்ல முடியாது. வேண்டியதை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், சாதாரண மக்களோடு மக்களாக செல்ல முடியாது.


பாதுகாப்பு கவலை


ஒரு மில்லியனராக இருப்பவர் என்றால் அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்பது அவசியமாகிறது. குழந்தைகள் சுதந்திரமாக வெளியில் சென்றுவர முடியாது. அவர்களுக்கென பிரத்யேகமாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவர்களையும், தன்னையும் எப்படி பாதுகாத்துக்கொள்வது என்ற ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். 


ரகசியங்கள்


மில்லியனராக இருப்பவர்கள் ரகசியங்களை காப்பவராக இருக்க வேண்டும். தன்னுடைய தனிப்பட்ட தொழில் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்கள் காக்கப்படாவிட்டால், மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாக கூற முடியாது. ஒரு சிலருக்கு அவர்களுடைய வீட்டு முகவரியைக் கூட பகிர்வது பிரச்சனையாக இருக்கும். ஷாப்பிங் செல்வது முதல் சுற்றுலா செல்வது வரை என அனைத்திலும் ரகசியம் தான். 


விமர்சனங்கள்


மில்லியனராக இருப்பவர்கள் அனைவரும் விமர்சனங்கள் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களை சிலர் முட்டாள் என்பார்கள். உங்கள் நடவடிக்கையை கடுமையாக விமர்சிப்பார்கள். உங்களுக்கு சரி எனப்படுவது, பிறருக்கு தவறாகப்படும். இவற்றையெல்லாம் நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். இந்த பக்குவம் எல்லாம் மில்லியனர்களிடம் இருக்கும். அதற்காக பணம் எதற்கு சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு நீங்கள் வரவேண்டாம். 


மேலும் படிக்க | மகர ராசிக்குள் நுழையும் சனி; 2025ம் ஆண்டு வரை இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்


பணம் சம்பாதிப்பதால் கிடைக்கும் புகழும், சொகுசு வாழ்க்கையையும் நீங்கள் நன்கு அறிந்துவைத்திருப்பீர்கள். அதேநேரத்தில், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR