புது வருடத்தை கொண்டாட 5 சரியான சுற்றுலா தலங்கள்!! உடனே Bag-ஐ பேக் பண்ணுங்க..
Travel Destinations To Celebrate New Year 2025 : 2025 ஆம் ஆண்டு புது வருடம் விரைவில் பிறக்க இருக்கிறது. இந்த வருடத்தை கொண்டாட சரியான சுற்றுலா தலங்களை இங்கு பார்ப்போம்.
Travel Destinations To Celebrate New Year 2025 : புது வருடம் பிறக்கிறது என்றாலே ஒருவிதற் குஷி நம்ம அறியாமல் மனதிற்குள் தொற்றிக் கொள்ளவும். புதிய தொடக்கங்கள், புதிய வாய்ப்புகள், புத்தாடைகள் என அனைத்துமே பார்க்கவும் பழகவும் புதிதாக இருக்கும். இந்த புதுவருடம் பிறக்கையில், அதனை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என நினைப்போம். சிலருக்கு அந்த கொண்டாட்டம் பார்டியாக இருக்கலாம், சிலருக்கு அந்த கொண்டாட்டம் பக்தியாக இருக்கலாம், இன்னும் சிலருக்கு தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது கொண்டாட்டமாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் அதற்குரிய, சரியான 5 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களை இங்கு பார்ப்போம்.
கோவா:
இந்தியர்களுக்கு மினி சொர்க்க கடலாக இருக்கிறது, கோவா. வெளிநாட்டு பயணிகளில் இருந்து, உள்நாட்டில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இடமாக இருக்கிறது கோவா. இந்தியாவின் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாக விலங்கும் இந்த தளம், சூரிய உதயத்திற்கும் மறைவிற்கும் பிரபலமானது. இதைத்தவிர்த்து இரவில் பார்டி செய்வதற்கும் சரியான தளம் இது. நியூ இயர் கொண்டாட விரும்புபவர்கள், இங்கு செல்லலாம்.
மனாலி:
கண்களால், லைவ் ஆக மணிரத்னம் பட காட்சிகளை பார்க்க வேண்டும் என்றால் மனாலிக்கு செல்லலாம். சுற்றி மலைப்பிரதேசங்கள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சி அமைப்புகள், பணி படர்ந்த இலை-தழைகள் என அதை பற்றி நினைக்கும் போதே உள்ளுக்குள் ஜில்லென்று காற்றடிக்கும். வருடா வருடம், புது வருடத்திற்கு மட்டுமன்றி, பல்வேறு சீசன்களில் இந்த இடத்திற்கு பல லட்சம் பேர் வருகின்றனர். புது வருடத்திற்கான பார்டி கொண்டாட, அழகாக குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க, இந்த இடத்திற்கு செல்லலாம்.
உதகை:
பலரால் செல்லமாக ‘ஊட்டி’ என அழைக்கப்படும் இயற்கையின் இளவரசி, இந்த இடம். இந்த இடத்தில் பொதுவாக நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். காரணம், இந்த ஊரின் வானிலை இந்த மூன்று மாதங்களில் மழையும்-பனியும் படர்ந்தார் போல் இருக்கும். எனவே, புது வருடத்தை இயற்கை சூழ நீங்கள் காெண்டாட நினைத்தால், இந்த இடத்திற்கு செல்லாம்.
மேலும் படிக்க | கையில் காசே இல்லாமல் பயணம் செய்வது எப்படி? சூப்பரான எளிய வழிகள்...
புதுச்சேரி:
கடலையும், கடல் சார்ந்த கொண்டாட்டங்களையும் புது வருடத்தில் நம்மால் பிரிக்கவே முடியாது. இங்கிருக்கும் பெரும்பாலான இடங்கள், புது வருடத்தில் நிரம்பி இருக்கும். நீங்கள் கொண்டாட்டங்களை விரும்பும் மனிதராக இருந்தால், இந்த இடமும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அது மட்டுமன்றி, இங்கு கொஞ்சம் பட்ஜெட்டையும் பார்த்துக்கொண்டால் பலவித நல்ல அனுபவங்களை நீங்கள் பெறலாம்.
மதுரை:
கடவுள் பக்தி நிறைந்தவர்களுக்கு மட்டுமல்ல, உனவை விரும்புபவர்கள், நல்ல கோயில் ஸ்தலங்களை பார்க்க விரும்புபவர்கள் என பலருக்கு முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது, மதுரை. இங்கிருக்கும் குமார் மெஸ், முருகன் இட்லிக்கடை, கோனால் கடை ஆகியவை தமிழக அளவில் பிரபலமான கடைகளாக விளங்குகின்றன. இந்த ஊருக்கே உரித்தான மட்டன் பரோட்டா, ஜிகர்தண்டா, கரி தோசை ஆகியவற்றை நீங்கள் சுவைத்து மகிழலாம். புது வருடத்தின் போது இங்கிருக்கும் பல இடங்களில் ஆஃபர்களும் போடுவதுண்டு. எனவே இங்கும் குடும்பத்துடன் சென்று உங்கள் புது வருடத்தை கொண்டாடலாம்.
மேலும் படிக்க | விமானத்தில் பயணம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ