இந்த credit card மூலம் உணவக பில் பாதியாகும், இன்னும் பல சலுகைகள்: முழு விவரம் இதோ!!
நீங்கள் உணவகத்தில் சாப்பிடுவதில் அதிக நாட்டம் உடையவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் விரும்பினால், உங்கள் உணவக பில்லை பாதியாகக் குறைக்க முடியும்.
நீங்கள் உணவகத்தில் (Restaurents) சாப்பிடுவதில் அதிக நாட்டம் உடையவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் விரும்பினால், உங்கள் உணவக பில்லை பாதியாகக் குறைக்க முடியும். ஆம், இது உண்மைதான். இதற்கு நீங்கள் இண்டிகோ (Indigo) மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் (HDFC Bank) 6E Rewards co-branded Credit Card-ஐ பயன்படுத்தினால் போதும். 6E Treats இந்த சலுகையை நாடு முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட உணவகங்களில் இணைத்துள்ளது. அங்கு 6ETreats.com-ல் 6E Rewards co-branded credit card மூலம் உணவுக்கான பில்லில் உடனடியாக 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இது மாஸ்டர்கார்டு சப்போர்ட் செய்யும் கிரெடிடி கார்ட் (credit card) ஆகும்.
இந்த கிரெடிட் கார்டு எவ்வாறு செயல்படுகிறது
• முதலில் நீங்கள் உணவிற்கு இந்த கார்டின் இணைப்பில் இருக்கும் ஒரு உணவகத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
• இப்போது 6ETreats.com இல் உள்ள உணவகத்தைத் தேர்ந்தெடுத்து உணவு கட்டணத்தை செலுத்துங்கள்.
• இங்கு 6E Rewards co-branded credit card மூலம் நீங்கள் உணவு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• கட்டணம் செலுத்திய பிறகு உங்களுக்கு, 6E Rewards-ல் 50 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.
ALSO READ: Umang App மூலம் மிக எளிதாக இந்த வழியில் PF தொகையைப் பெறலாம்!!
சலுகை செல்லுபடி
இந்த சலுகை 2020 செப்டம்பர் 7 முதல் 2020 அக்டோபர் 15 வரை செல்லுபடியாகும். இதில், உறுப்பினர்கள் போனஸ் 6E Rewards- என்ற பெயரில் மொத்த உணவக பில்லில் 50 சதவீத போனஸ் வெகுமதிகளையும் பெறலாம்.
6E Rewards Membership
6E Rewards-ன் மெம்பர்ஷிப்பை நீங்கள் பெற்றால், அதாவது நீங்கள் அதன் உறுப்பினரானால், நீங்கள் பல வித நன்மைகளைப் பெறுவீர்கள். இதில், இண்டிகோவில் 2.5 சதவீதம் தள்ளுபடி, உணவு, பொழுதுபோக்கு மற்றும் மளிகை ஆகியவற்றில் 2 சதவீதம், சிறப்பு கூட்டாளர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைப்பதோடு, கன்வென்சிங் கட்டணத்தில் 100 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.
இந்த மெம்பர்ஷிப்புக்கு ஆண்டுக்கு 700 ரூபாய் கட்டணம் அளிக்க வேண்டும். இதைத் தவிர ஆண்டுக்கு 2500 ரூபாய்க்கான மெம்பர்ஷிப்பும் உள்ளது. இதில் உங்களுக்கு அதிக வசதிகளும் சலுகைகளும் கிடைக்கும்.
ALSO READ: ATM-ல் பணம் எடுக்கணுமா? உங்கள் பாதுகாப்புக்கான tips இதோ!!