Life Lessons To Learn From Kamal Haasan : இந்திய திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் கமல்ஹாசனுக்கு நவம்பர் 7ஆம் தேதியான இன்று பிறந்தநாள். இவருக்கு இப்போது 70 வயதாகிறது. திரையுலகை தாண்டி, இவரது நேர்மையான கருத்துகளும் அறிவார்ந்த பேச்சுகளும் பலருக்கு பிடிக்கும். பலர், இவர் கூறும் கருத்துகளை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள், இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில வாழ்க்கை பாடங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 


 

கற்றலை நிறுத்த கூடாது:

 

நடிகர் கமல்ஹாசன், தனது 6 வயதில் திரையுலகிற்குள் நுழைந்தார். அப்போது முதல் இப்போது வரை அவர் நிறுத்தாத இரண்டு விஷயங்கள் நடிப்பதையும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதையும். இத்தனை ஆண்டுகளில் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை தன் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் நினைவு கூர்ந்து அதன் மூலம் தான் கற்ற பாடங்களையும் பிறருக்கு எடுத்துரைப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளை கற்றிருக்கும் இவர் “கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு” எனும் பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இந்த வயதிலும் AI குறித்து படிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

 

தோல்விகளை ஏற்றுக்கொள்ளுதல்:

 

கமல்ஹாசனின் வாழ்வில் ஆரம்பத்தில் பல படங்கள் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவின. அதிலும், அவர் இயக்கிய படங்கள் பெரிதும் சறுக்கின. இந்த சமயங்களில் கூட துவண்டு போகாத கமல்ஹாசன், புதிது புதிதாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இப்போதும் உலக நாயகனாக விளங்கி வருகிறார். 

 

செய்யும் வேலைக்கு உண்மையாக இருப்பது:

 

கமல்ஹாசன், தான் செய்யும் தொழிலை பெரிய தெய்வமாக மதிப்பவர். படத்திற்காக எந்த மாதிரியான கடின உழைப்பை போட வேண்டும் என்றாலும் அதற்கு சிறிதும் தயங்காதவர். அவருக்கு நடிப்பு கலை மீது ஆர்வம் இருப்பது போல, நமக்கும் வாழ்வில் ஏதேனும் ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருக்கும். அதில் நாம் முன்னேற வேண்டும் என்றால், நாம் அதற்கும் நம் மனதுக்கும் உண்மையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

 

அடக்கம் ஆரிருள் உய்க்கும்:

 

கமல்ஹாசன் ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு கடின உழைப்பு பெரிதளவில் கைக்கொடுக்கும் என்பதை பெரிதளவில் நம்புபவர். என்னதான் பெரிய அளவில் சாதித்தாலும், அடக்கமாக இருக்க வேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருப்பவர் இவர். வாழ்வில் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும், எவ்வளவு சிறிய தோல்வி கிடைத்தாலும் அது தன்னை மாற்றி விடக்கூடாது என்று நினைக்கும் கமல், எல்லா நிலையிலும் ஒரே இயல்பில் இருக்க வேண்டும் என்று கருதுவார்.

 


 

சவால்களை எதிர்கொள்ளுதல்:

 

நெடுங்காலமாக பலரால் பேசப்படும் தவறான கருத்துகளை அடித்து உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், கமல். சமூகத்தில் பேசக்கூடாத விஷயங்களாக இருப்பவற்றை பற்றி தன் படங்களில் பேசுவது, தனக்கென ஒரு கோட்பாடுகளை வைத்து இதையெல்லாம் படங்களில் கூட செய்து விடக்கூடாது எனும் தெளிவுடன் இருப்பார். இதனால், யார் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கொண்டவர் இவர். 

 

தனித்துவம்:

 

எந்த விஷயம் செய்தாலும் அது தனித்துவமாக இருக்க வேண்டும் என்று யோசிப்பவர் இவர். தன்னை சுற்றி இருப்பவர்களையும், தன்னை சேர்ந்தவர்களையும் இப்படி இருக்க ஊக்கப்படுத்துவார். அவரது வெற்றிகளே, அவர் தனித்துவத்தினால்தான் வந்தது என்று கூறினால் மிகையாகாது. 

 

சமூக சேவை:

 

கமல்ஹாசனை தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைக்கவில்லை என்றாலும், அவர் அரசியலுக்கு வந்த போது அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். காரணம், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் அரசியலுக்கு வந்திருந்தது அனைவருக்கும் பிடித்திருந்தது. அரசியலில் தோல்வியுற்றாலும் தற்போது தாெடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வெவ்வேறு வழிகளை கண்டுபிடித்து வருகிறார். 

 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ