கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து இருந்த டிரம்ப் தற்போது அரசியல் மறுபிரவேசத்தை நெருங்கி வருகிறார். ஒரு சில இடங்களில் பின்னிலை அடைந்தாலும் அமெரிக்கா முழுவதும் வலிமையை காட்டி வருகிறார்.
ஹிஸ்பானிக் வாக்காளர்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள் டிரம்ப்க்கு தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்தார்.
காலை 11 மணி நிலவரப்படி டிரம்ப் 230 எலெக்டோரல் கல்லூரி வாக்குகளையும், ஹாரிஸ் 210 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜனாதிபதி பதவியை பெற மொத்தம் 270 வாக்குகள் தேவை.
2020 ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் டிரம்ப்க்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.
பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக இருந்த வாக்காளர்கள் டிரம்பிற்கு அதிகளவில் வாக்களித்தனர், குறிப்பாக அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நிதி ரீதியாக மோசமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தால்.
அமெரிக்கா முழுவதும் உள்ள கிட்டதட்ட 45% மக்கள் கடந்த 4 ஆண்டுகளில் தங்களின் வருமானம் மற்றும் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.