7th Pay Commission latest news today: ஹோலிக்கு முன்பு சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை அறிவிக்கும். இது தவிர, ஓய்வுபெற்ற 60 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் நிவாரணம் கிடைக்கக்கூடும். இந்த அரசு ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படி கொடுப்பனவில் அதிகரிப்பை காணக்கூடும். இருப்பினும், இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி 2021 முதல் நிலுவையில் உள்ளது. இதுமட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) பற்றியும் இன்னும் எந்த தெளிவான புரிதலும் இல்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவொலை நிவாரணம், அகவிலைப்படியுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அரசாங்கம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டால், மத்திய அரசு ஊழியர்களின் DA ஏப்ரல் முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். இதன் மூலம் அவர்களது அடிப்படை சம்பளத்தின் மொத்த DA 25 சதவீதமாக (17 + 4 + 4) அதிகரிக்கும். எனினும், அரசாங்கம் தனது அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.


ALSO READ: இந்த ஆண்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் salary hike, bonus கிடைக்கும்: ஆய்வு


DA விகிதங்களில் முன்னேற்றம்


ஊடக அறிக்கைகளின் படி, கோவிட் 19 தொற்றுநோயை அடுத்து, DA விகிதங்களை அரசாங்கம் பழைய மட்டத்தில் வைத்திருக்க வேண்டியிருந்ததால், தற்போது DA விகிதங்களை அரசாங்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இது 21 சதவீதமாக உள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் மத்திய அரசாங்கத்திடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஜூலை 2020 முதல் DA மற்றும் DR முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


DA உயர்வு கணக்கீடு


சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) தரவுகளின் அடிப்படையில், ஏ.ஜி. பிரதர்ஹுட்டின் பிரயாகராஜைச் சேர்ந்த ஹரிஷங்கர் திவாரி, டிசம்பர் AICPI எண் 342 ஆக இருப்பதால், ஜனவரி 2021 முதல் நிலுவையில் உள்ள DA உயர்வு 4 சதவீதத்திற்கு குறைவாக இருக்காது என கூறினார். 2020 ஜூலை மற்றும் டிசம்பர் வரையிலான காலத்தின் AICPI எண் 335 bps அதாவது 3.35 சதவீதமாக இருந்தது. DA உயர்வு விதியில் உள்ளது போல், அறிவிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச DA அடுத்த மொத்த ஃபிகரான 4.0 ஆக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களால் ஜனவரி முதல் ஜூன் 2021 வரையிலான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 4 சதவீத DA உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.


DA சேர்த்து வழங்கப்படுவது (DA Restoration)


ஜனவரி 2021 முதலான DA உயர்வை அறிவிக்கும் போது DA நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன. அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் தற்போதுள்ள 17% DA 25 சதவீதமாக உயரும்.


குடும்ப ஓய்வூதிய வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது


இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைக்கு உதவவும், அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பை வழங்குவதற்கும் மத்திய அரசு சமீபத்தில் குடும்ப ஓய்வூதியத்திற்கான (Family Pension) மேல் உச்சவரம்பை 45,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தியது. குடும்ப ஓய்வூதியத்தில் செய்யப்பட்ட இந்த சுமார் மூன்று மடங்கு அதிகரிப்புக்கு பின்னர், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியிலும் நல்ல செய்தி அளிப்பதை குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.


ALSO READ: 6 கோடி மக்களுக்கு good news: PF-ல் தொடர்ந்து 8.5% வட்டி கிடைக்கும், விகிதம் குறைக்கப்படவில்லை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR