7th Pay Commission: DA, TA, DR உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்: Experts

7th Pay Commission: 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கான தங்களின் அகவிலைப்படி அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

AICPI (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) அளித்த அறிவிப்புக்கு பின்னர், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு குறைந்தது 4 சதவீத DA-வை அறிவிக்கும் என்ற ஊகங்கள் பரவியுள்ளன. 

1 /5

DA அறிவிக்கப்பட்டவுடன் மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி (TA) தானாகவே உயரும் என்பதால், DA அறிவிப்புக்குப் பிறகு மாத சமளம் அதிக அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அதற்கு ஊழியர்கள் DA மீண்டும் அளிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் மத்திய அரசு அதை 2021 ஜூன் வரை பழைய DA விகிதத்தில் முடக்கியுள்ளது. Source: PTI

2 /5

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA-வை அறிவிக்க மத்திய அரசு எவ்வாறு முடிவு செய்கிறது என்பது குறித்து பேசுகையில், ஏ.ஜி. பிரதர்ஹுட்டின் ஹரிஷங்கர் திவாரி "டிசம்பர் 2020 AICPI எண் 342 ஆக இருக்கிறது. அதாவது 2020 ஆம் ஆண்டிற்காக சராசரி AICPI 335 ஆக உள்ளது. அதாவது டிசம்பர் 2020 AICI 3 புள்ளிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மையம் 4 சதவீதத்திற்கு மேல் DA-ஐ அறிவிக்க வாய்ப்பில்லை.”என்றார். Source: PTI

3 /5

மத்திய அரசு ஊழியர்களிடையே 4 சதவீத DA -வுக்கான ஊகங்கள் எவ்வாறு சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கின என்பது பற்றி கூறுகையில், திவாரி, "பணவீக்கத்தில் 8 புள்ளிகள் குறைந்திருந்தால், DA உயர்வு 3 சதவீதமாக இருந்திருக்கலாம். 2020 டிசம்பர் பணவீக்கத்தில் 24 புள்ளிகள் அதிகரிப்பு இருந்திருந்தால் DA 5 சதவீதமாக மாறியிருக்கக்கூடும். ஒரு மாதத்தில், பணவீக்கத்தில் இதுபோன்ற மாறுதல்களை எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த அனுமானத்தின் அடிப்படையில் மத்திய அரசு வட்டாரங்களும் சில ஊடக வல்லுநர்களும் DA உயர்வு குறித்து ஊகிக்கத் தொடங்கினர்" என்று கூறினார். Source: PTI

4 /5

பயணப்படி அதாவது TA உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் DA-வுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. ஒரு மத்திய அரசு ஊழியரின் TA அவரது DA உயர்வுடன் ஒத்திசைகிறது. எனவே, இந்த DA கணக்கீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் TA-வில் அதே 4 சதவீத உயர்வை எதிர்பார்க்கலாம். Source: PTI

5 /5

மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களும் அல்லது மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் அகவிலை நிவாரணம் (DR) பெறுகிறார்கள். இது அறிவிக்கப்பட்ட DA-வுடன் ஒத்திசைந்து அதிகரிக்கிறது. எனவே, ஹரிஷங்கர் திவாரி செய்த கணக்கீட்டின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் 4 சதவிகித DR உயர்வை எதிர்பார்க்கலாம். Source: Reuters