புதுடெல்லி: 7th Pay Commission Update: கடந்த சில மாதங்களில், அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஏழாவது பே கமிஷன் தொடர்பான செய்திகள், எப்போதுமே மத்திய, மாநில அரசு ஊழியர்களின் கவனத்தை பெறுபவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வரிசையில், ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி (7th Pay Commission Latest News) உள்ளது. அரசு ஊழியர்களின் DA மற்றும் DR ஐ மீண்டும் 3% உயர்த்தி DA Hike) அறிவித்த ஏழாவது பே கமிஷனின் அறிவிக்கப்பட்ட உயர்வு, ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும். 


தற்போது, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு இது... விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!


மத்திய அரசு, தனது ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்காக உதவித்தொகை கொடுக்கிறது. ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு ரூ.2250. இரண்டு குழந்தைகளுக்கு, ஊழியர்களுக்கு ரூ.4500 மாதாந்தோறும் கிடைக்கும். 


ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு 


7வது ஊதியக்குழுவின் இந்த அறிவிப்பு, கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. இதுவரை கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


எனவே, இந்தத் தொகையை பெற முடியாமல் இருந்த ஊழியர்கள், இப்போது அதை கோரலாம். இதற்கு, தேவையான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்துமே தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.


CEA உரிமைக்கோரல்
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகிறார்கள், இது மாதம் ரூ.2,250. ஆனால், கடந்த ஆண்டு முதல், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய ஊழியர்கள் CEA க்கு உரிமை கோர முடியவில்லை.


ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் பரிசு; 3% DA உயர்வு


CEA கோரிக்கைக்கு பல ஆவணங்கள் தேவை
குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற, மத்திய ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் இருந்து பெறப்பட்ட அறிவிப்பில், குழந்தை தங்கள் நிறுவனத்தில் படிப்பது தொடர்பான விவரங்கள் குறிபிடப்பட்டிருக்கும்.


அத்துடன், படித்த கல்வியாண்டும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். CEA தொகைக்காக விண்ணப்பிக்கும்போது, குழந்தையின் ரிப்போர்ட் கார்டு, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் பள்ளிக் கட்டண ரசீது ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.


சுய பிரகடனம்
ஜூலை மாதம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஒரு அலுவலகம் (OM) ஒன்றை வெளியிட்டது. அதில், கொரோனா பாதிப்பால், குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதில், மத்திய பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.


ஏனெனில், ஆன்லைனில் கட்டணத்தை (Online fees) டெபாசிட் செய்த பிறகும், தேர்வு முடிவுகள்/ரிப்போர்ட் கார்ட் போன்றவற்றை எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் பள்ளிகள் அனுப்பவில்லை.


எனவே, மத்திய அரசு ஊழியர்கள், CEA உரிமைகோரலை சுய அறிவிப்பு மூலமாகவோ அல்லது தேர்வு முடிவு/ரிப்போர்ட் கார்ட்/எஸ்எம்எஸ்/பள்ளிக்கட்டணம் செலுத்திய மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட் மூலமாகவும் கோரலாம் என்று DoPT கூறியுள்ளது. இருப்பினும், இந்த வசதி 2020 - 2021 இல் முடிவடையும் கல்வியாண்டுக்கு மட்டுமே கிடைக்கும்.


ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி!


உங்களுக்கு எவ்வளவு கொடுப்பனவு கிடைக்கும்?
மத்திய ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளின் கல்விக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகை, ஒரு குழந்தைக்கு இந்த உதவித்தொகை மாதத்திற்கு ரூ.2250. அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மாதம் 4500 ரூபாய் கிடைக்கும்.


இருப்பினும், இரண்டாவது குழந்தை இரட்டையராக இருந்தால், முதல் குழந்தையுடன் இரட்டையர்களின் கல்விக்கும் என மூன்று குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


ஒரு ஊழியர் இதுவரை 2020 - 2021 கல்வியாண்டுக்கு உண்டான உரிமை கோரவில்லை என்றால், அதை உரிமை கோரலாம். உரிமை கோராவிட்டால், அவரது சம்பளத்தில் இந்தத்தொகை சேர்க்கப்படும். அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR