7th Pay Commission மிகப்பெரிய முடிவு: இவர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது
மத்திய இணை அமைச்சர் சிங், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அதிகப்படியான மருத்துவ கண்காணிப்பும் நிதி உதவியும் தேவைப்படுகின்றன. இந்த முடிவால், இந்த குழந்தைகளின் சுமுகமான வாழ்க்கை மற்றும் சிறந்த பொருளாதார நிலை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
7th Pay Commission Pension News: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இறந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பெரிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என மோடி அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இந்த முக்கிய முடிவைப் பற்றி கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி, இந்த குழந்தைகளின் சிறப்பான கவனிப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார்.
மத்திய இணை அமைச்சர் சிங், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அதிகப்படியான மருத்துவ கண்காணிப்பும் நிதி உதவியும் தேவைப்படுகின்றன. இந்த முடிவால், இந்த குழந்தைகளின் சுமுகமான வாழ்க்கை மற்றும் சிறந்த பொருளாதார நிலை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
பி.டி.ஐ.யின் அறிக்கையின்படி, சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள் 1972 ன் கீழ், இறந்த அரசாங்க ஊழியர்கள் (Central Government Employees) அல்லது ஓய்வூதையதாரர்களின் குழந்தைகள் அல்லது உட்ட பிறந்தவர்களுக்கு குடும்ப ஊதியம் வழங்குவதற்கான வருமான அளவுகோல்களை தாராளமயமாக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
ALSO READ: 7th Pay Commission: இந்த ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி, அதிகரித்தது ஓய்வூதியம்
குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெற மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு பொருந்தும் வருமான அளவுகோல், மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தை அல்லது உடன் பிறந்தவர்களுக்கு பொருத்தமாக இருக்க முடியாது என அரசாங்கம் கருதுகிறது.
அதன்படி, பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகள் அல்லது உடன்பிறப்புகளின் குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதிக்கான வருமான அளவுகோலை அரசாங்கம் மதிப்பாய்வு செய்துள்ளது. அது அவர்களின் குடும்பத்தில் உள்ள குடும்ப ஓய்வூதியத் தொகைக்கு ஏற்ப இருக்கும் என்று முடிவு செய்துள்ளதாக சிங் கூறினார்.
ஒரு இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் குழந்தை அல்லது உறன்பிறப்பு மனநிலை அல்லது உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் குடும்ப ஓய்வூதியத்திற்கு வாழ்நாள் முழுவதும் தகுதியுடையவராக இருப்பார் என்று ஓய்வூதியம் (Pension) மற்றும் ஓய்வூதியர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972 ன் விதி 54 (6) ன் படி, இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் ஒரு குழந்தை அல்லது உடன்பிறப்பு, மன அல்லது உடல் ஊனத்தால் அவதிப்பட்டு, வாழ்நாள் முழுவதும் வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதற்குமான குடும்ப ஓய்வூதியத்தை பெற தகுதி பெறுவார் என பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் குழந்தை அல்லது உடன்பிறப்பின் வருமானம், குடும்ப ஓய்வூதியத்தைத் தவிர மற்ற இடங்களிலிருந்து வரும் வருமானம், குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்திலிருந்து, அதவது ரூ.9,000-க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அவர் வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாக கருதப்படுகின்றது.
ALSO READ: 7th Pay Commission: 8 லட்சம் PSU ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டி.ஏ அதிகரிக்கப்பட்டது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR