Alert for Pensioners: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஓய்வூதியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கத்தை நீக்கிய பின்னர் இப்போது உள்துறை அமைச்சகம் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக அதிகரித்தது அகவிலை நிவாரணம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலை நிவாரண அதிகரிப்பை அரசாங்கம் முடக்கியது. தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 சதவீத அகவிலை நிவாரணம் (Dearness Relief) வழங்கப்படுகிறது.
இயக்குநர் மீனு பத்ராவின் உத்தரவின்படி, மத்திய சுதந்திரப் போராட்ட ஓய்வூதியதாரர்கள் (central freedom fighter pensioners), அவர்களைச் சார்ந்தவர்கள் அல்லது அவர்களின் மகள்களுக்கு அளிக்கப்படும் அகவிலை நிவாரணத்தை 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ: 7th Pay Commission: 8 லட்சம் PSU ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டி.ஏ அதிகரிக்கப்பட்டது
மாதாந்திர ஓய்வூதியத்தில் 7800 அதிகரிப்பு
ஓய்வூதியம் பெறுபவர்களின் (Pensioners) அனைத்து பிரிவிற்கும் இந்த அகவிலை நிவாரணம் பொருந்தும். அதாவது, இப்போது அனைத்து ஓய்வூதியதாரரின் மாதாந்திர ஓய்வூதியமும் சுமார் ரூ .7,800 அதிகரித்துள்ளது. இந்த உயர்வு 1 ஜூலை 2021 முதல் அமலுக்கு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, மத்திய ஓய்வூதியதாரர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான செய்தியாக வந்துள்ளது.
ஓய்வூதியதாரர்களின் வகை
ஓய்வூதியம் பெறுபவர்களின் வகைகளில், அந்தமானின் முன்னாள் அரசியல் கைதிகள், கணவர், மனைவி, பிரிட்டிஷ் ஆளுமைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது கணவன் / மனைவி (இதில் INA-வும் அடங்கும்) ஆகியோர் அடங்குவர். இவர்களது ஓய்வூதியம் முறையே: ஒரு மாதத்திற்கு ரூ. 30,000 லிருந்து ரூ .37800 ஆகவும், ரூ .28000 லிருந்து ரூ .35280 ஆகவும், ரூ .26000 லிருந்து ரூ .32760 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தவிர, ஓய்வூதியதாரர்களை சார்ந்தவர்களின் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ .13000 லிருந்து ரூ .15000 வரை இருந்தது. அது மாதம் ரூ .16380 லிருந்து ரூ .18900 வரை அதிகரித்துள்ளது. இது தவிர, மத்திய (Central Government ) சம்மான் ஓய்வூதியத்தில் டிடிஎஸ் வசூலிக்கப்படாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: 7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR