7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் அதிகரிக்கிறது ஊதியம்
7th Pay Commission: அதிகரித்து வரும் பணவீக்கத்திலிருந்து விடுபட, ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அதிகரிக்கலாம்.
7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை உயர்த்தி மார்ச் மாதம் அரசு அறிவித்தது. அதன்பிறகு ஏப்ரலில் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலையில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம்.
அகவிலைப்படி 4% அதிகரிக்கப்படலாம்
அதிகரித்து வரும் பணவீக்கத்திலிருந்து விடுபட, ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அதிகரிக்கலாம். ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கலாம் என்று மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் (AICPI) உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஏ 38 சதவீதத்தை தாண்டலாம்
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் எஐசிபிஐ-இல் ஏற்பட்ட சரிவினால் ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என தோன்றியது. எனினும், தற்போது மார்ச் மாத எண் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் டிஏ 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும்.
மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: ஜூலையில் மீண்டும் டிஏ அதிகரிப்பு, விவரம் இதோ
அகவிலைப்படி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன
ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிப்பு மற்றும் பணவீக்க உயர்வு ஆகியவற்றைப் பார்க்கும்போது, டிஏ உயர்வு 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அகவிலைப்படி 38%க்கு மேல் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும், டிஏ உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன. இது முன்னர் ஒரு கேள்விக்குறியாக இருந்தது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான எண்கள் இன்னும் வரவில்லை
ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022க்கான எஐசிபிஐ குறியீட்டில் சரிவு ஏற்பட்டது. எஐசிபிஐ குறியீடு ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்தன. மார்ச் மாதத்தில் 1 புள்ளி உயர்ந்து 126 ஆக இருந்தது. இப்போது ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை 126க்கு மேல் சென்றால், டிஏ உயர்வு 4 சதவீதத்திற்கு மேல் செல்லலாம்.
தற்போது அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது
எஐசிபிஐ குறியீட்டின் தரவு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஜனவரி 2022-யில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு பரிசாக கிடைத்துள்ளது. தற்போது ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது. இப்போது ஜூலை மாத அகவிலைப்படி (அடுத்த டிஏ உயர்வு) ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்.
ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும் காரணம் என்ன?
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவை மேம்படுத்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்தாலும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் டிஏ அதிகரிக்குமா? ஏஐசிபிஐ தரவுகள் சொல்வது என்ன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR