7வது ஊதியக்குழு: சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை அதிகரித்து அவர்களுக்கு நல்ல செய்தியை அளித்தது. இப்போது இந்த தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவுள்ளது.
அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் 45 லட்சம் ஊழியர்களின் கணக்கில் இந்தப் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும், மாதத்தின் கடைசி தேதிக்குள் வருகிறது.
மூன்று மாத நிலுவைத் தொகை வழங்க முடிவு
கடந்த மாதம், ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (டிஆர்) அரசாங்கத்தால் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பிறகு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தவும், மூன்று மாத நிலுவைத் தொகையை வழங்கவும் நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் மாத சம்பளம் மே 1ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
45 லட்சம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்
ஏப்ரல் மாத சம்பளம் அதிகரித்த அகவிலைப்படி மற்றும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் (ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்) வரும். இதில், 45 லட்சம் மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெற உள்ளனர்.
அதிகரித்த டிஏ-வின் கணக்கீடு என்ன?
அடிப்படை சம்பளம் ரூ. 18,000
- அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்ததால், 18 ஆயிரம் அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு ரூ.6,120 டி.ஏ கிடைக்கும்.
- இவர்கள் தற்போது 31% வீதம் ரூ.5,580 பெற்று வந்தனர்.
- அதாவது, ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.540 அதிகரித்துள்ளது.
- ஏப்ரல் மாத சம்பளத்துடன், 3 மாத டிஏ பாக்கியும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.
- ஆகையால், மார்ச் மாத சம்பளம் ரூ.2,160 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படைச் சம்பளம் ரூ.56,900
- அடிப்படைச் சம்பளம் ரூ.56,900 ஆக இருப்பவர்களின் டிஏ ரூ.19,346 ஆக அதிகரிக்கும்.
- முன்னதாக இது 31 சதவீதத்தில் ரூ.17,639 ஆக இருந்தது.
- அதாவது, ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.1,707 அதிகரித்துள்ளது.
- ஆகையால், மார்ச் மாதத்தை விட இந்த முறை ரூ.6,828 கூடுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 மாத நிலுவைத் தொகையில் அதிர்ச்சி
அகவிலைப்படி உயர்வுக்கு முன், மத்திய ஊழியர்களும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை ஏற்கனவே அரசால் மறுக்கப்பட்டு விட்டது. இதனால் ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அதிர்ச்சி, ஜூலையில் டிஏ அதிகரிப்பு இருக்காதா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR