7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த ஊழியர்களின் அகவிலைப்படியில் 14% அதிகரிப்பு!!
ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, இப்போது அவர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படியை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்புக்கு பின், ஊழியர்களின் அகவிலைப்படி 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஊழியர்களின் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, இப்போது அவர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்பு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) ஊழியர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி இறுதியில் திருத்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி எவ்வளவு உயர்ந்துள்ளது?
துணைச் செயலாளர் சாமுவேல் ஹக் கூறுகையில், “போர்டு மட்டத்தில் உள்ள CPSE களுக்கான அகவிலைபப்டி விகிதங்கள் மற்றும் வாரிய மட்டத்திற்கு கீழே உள்ள அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான அகவிலைப்படி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன. 2007 ஊதிய விகிதத்தின் கீழ் CPSE களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அல்லாத மேற்பார்வையாளர்களுக்கான அகவிலைப்படி விகிதம் இப்போது 184.1% ஆகியுள்ளது. இவர்கள் இதுவரை 170.5% அகவிலைப்படி பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி
ஜூலை 2021 இல், அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரிப்பதாக அறிவித்தது. இதற்குப் பிறகு, 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 11 சதவிகிதம் நேரடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், CPSE களில் 2007 ஊதிய விகிதங்களின் அகவிலைப்படியும் அதிகரிக்கப்பட்டது.
இதற்கு முன்பும் பம்பர் அதிகரிப்பு இருந்தது
கடந்த ஆண்டும் CPSE ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) கணிசமான அளவு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முந்தைய அகவிலைப்படியைப் பார்த்தால், ஜூலை 2021 இல், ஊழியர்களின் அகவிலைப்படி 159.9% இல் இருந்து 170.5% ஆக அதிகரித்துள்ளது. அதாவது, அகவிலைப்படியில் சுமார் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
இந்த புதிய டிஏ விகிதம் தொழில்துறை அகவிலைப்படி ஊழியர்களுக்கு (Industrial Dearness Allowance) பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தின் அடிப்படையில் டிஏ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நகர்ப்புற, செமி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம் வேறுபட்டிருக்கும்.
ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: 18 மாத டிஏ அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR