7th Pay Commission: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்த ஒரு மிகச்சிறந்த அப்டேட் இப்போது வந்துள்ளது.
7th Pay Commission: அரசு மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. வரும் விடுமுறை காலத்துக்கு முன் ஊதிய உயர்வு குறித்து அரசு அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. DA அதிகரிப்பு, முன்னர் கணிக்கப்பட்ட 3% ஐ விட 4% ஆக இருக்கும், மேலும் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதும் ஜூலை 1, 2023 முதல் கணக்கீடு செய்யப்படும். நவராத்திரி அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி, தசரா அக்டோபர் 24-ம் தேதி என்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வு (Dearness Allowance) மற்றும் நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்க மற்றும் சரியான நேரத்தில் பரிசாக இருக்கும்.
மேலும் படிக்க| பணத்தை பன்மடங்காக்கும் ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் (DA) 4 சதவீதம் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது, தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு DA, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DR வழங்கப்படுகிறது. டிஏ (Dearness Allowance) மற்றும் டிஆர் (Dearness Relief) ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலையில் உயர்த்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
டிஏ எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
DA-வை அதிகரிப்பதற்கான அடிப்படை சூத்திரம், தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிடத்தக்க வகையில், அரசு ஊழியர்களுக்கு DA வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு DR வழங்கப்படுகிறது.
டிஏ மற்றும் டிஆர் ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலையில் உயர்த்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். கடைசியாக 2023 மார்ச்சில் டிஏ உயர்த்தப்பட்டபோது, அது 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. தற்போதைய பணவீக்க விகிதத்தைப் பொறுத்தவரை, அடுத்த டிஏ உயர்வு இந்த பருவத்தில் 3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரியர் தொகை
ஜூலை 1 2023 முதல் நடைமுறைக்கு வரும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட டிஏ அக்டோபர் மாத சம்பளத்துடன் வரும். இது மட்டுமின்றி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் (DA Arrears) ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும். இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பம்பர் பண வரவு இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | Flipkart Big Billion Days 2023: ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு சலுகைகள்? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ