7th Pay Commisison: ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்... டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு

7th Pay Commission: பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 3, 2023, 10:26 AM IST
  • 7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு புதுப்பிப்பு செய்திகள்.
  • பல மாநிலங்கள் அகவிலைப்படியை அதிகரித்தன.
  • அகவிலைப்படி 4% அதிகரித்தால் ஊதியம் எவ்வளவு உயரும்?
7th Pay Commisison: ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்... டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு புதுப்பிப்பு செய்திகள்: இந்தியாவில் செப்டம்பர் மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அகவிலைப்படி அதிகரிப்பிற்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும். ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான (DA Hike) அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக்ககூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இன்னும் பல நல்ல செய்திகளும் ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விருவாக காணலாம். 

Add Zee News as a Preferred Source

7th Pay Commission: பல மாநிலங்கள் அகவிலைப்படியை அதிகரித்தன

மத்திய பிரதேசம், சிக்கிம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சமீபத்தில் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மாநிலங்களில், இப்போது ஊழியர்களுக்கு 38 சதவீதத்திற்கு பதிலாக 42 சதவீத அகவிலைப்படி கிடைத்து வருகிறது. இதற்கு முன்னர் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஜனவரி 2023 -க்கான ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது.

நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடையில் மத்திய அரசு ஜூலை 2023 -க்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) டிஏ ஹைக் 3 சதவீதம் இருக்கும் என ஒரு சாரார் கூறி வருகின்றனர். எனினும் ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என மற்றொரு சாரார் கூறி வருகின்றனர். மார்ச் மாதம் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக அதிகரித்தது. 

அகவிலைப்படி 4% அதிகரித்தால் ஊதியம் எவ்வளவு உயரும்?

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்

புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640

அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900

புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? 50% -ஐ தாண்டும் அகவிலைப்படி.. குஷியோடு காத்திருகும் ஊழியர்கள்

அகவிலைப்படி அரியர் தொகை (DA Arrears)

அகவிலைபடி (Dearness Allowance) அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு அக்டோபர் மாத பாதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில், ஜூலை 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இந்த நிலையில் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

50 சதவிகித அகவிலைப்படி: (50% DA Hike)

மத்திய அரசு ஊழியர்கள் மற்று ஓய்வூதியதாரர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. தற்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு, அடுத்து, ஜனவரி 2024-லும் 4 சதவிகித அதிகரிப்பு இருந்தால், அப்போது ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், விதிகளின் படி அகவிலைபப்டி 0 ஆக்கப்பட்டு மீண்டும் 1%, 2% என உயரத் தொடங்கும். 50 சதவிகித அகவிலைப்படிக்கான தொகை உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும். இது சம்பள திருத்தமாக இருக்கும். 

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. டிஏ உயர்வு, இந்த தேதியில் பெரும் பரிசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News