7th Pay Commission: இந்த தேதி முதல் டிஏ உயர்வு அமலுக்கு வரும்? வெளியான தகவல்!
7th Pay Commission: அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளின் படி, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வுவை தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கலாம்.
7th Pay Commission: பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே, ஊதிய உயர்வு குறித்த செய்தியை அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்திய தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சுமையை குறைக்க அக்டோபர் மாதம் முதல் அகவிலைப்படியை (டிஏ) அதிகரிக்க முன்மொழிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்தும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு நடைமுறைக்கு வந்தால், மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நவராத்திரிக்கு முந்தைய பரிசாக இது இருக்கும். இந்த அமைச்சரவை முடிவின் நேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்கலாம். ஜூலை முதல், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். ஊழியர்கள் எதிர்பார்த்தபடி, தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அகவிலைப்படியை அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | Amazon Great Indian Festival 2023: ஆண்களுக்கான ஆடைகளுக்கு 80% தள்ளுபடி!
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகை மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட்டால் அக்டோபரில் முழுமையாக வழங்கப்படும். நவராத்திரி அக்டோபர் 15ம் தேதியும், தசரா அக்டோபர் 24ம் தேதியும் இருப்பதால், சரியான நேரத்தில் டிஏ உயர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம். 4 சதவீத டிஏ உயர்வு அதிகரிக்கப்பட்டால் சம்பள எவ்வளவு உயரும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. ஒருவரின் சம்பளம் மாதம் ரூ.50,000 மற்றும் அடிப்படை ஊதியமாக ரூ.15,000 இருந்தால், இப்போது அவர் அடிப்படை ஊதியத்தில் 42 சதவீதமான ரூ.6,300 பெறுகின்றனர். இருப்பினும், எதிர்பார்க்கப்படும் 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, ஊழியருக்கு மாதம் ரூ.6,900 கிடைக்கும், இது ரூ.600 அதிகமாகும். எனவே, ஒருவருக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் ரூ.15,000 அடிப்படை ஊதியமாக இருந்தால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.600 உயரும்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance), ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் (Dearness Relief) வழங்கப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை என டிஏ மற்றும் டிஆர் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். கடந்த மார்ச் 2023ல், டிஏ 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. தற்போதைய பணவீக்க விகிதத்தைப் பொறுத்தவரை, பல்வேறு அறிக்கைகளின்படி அடுத்த டிஏ உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தின.
2006 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கிடுவதற்கான பார்முலாவை மத்திய அரசு திருத்தியது. அகவிலைப்படி சதவீதம் = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில் -115.76)/115.76)x100. மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33)x100.
மேலும் படிக்க | GPS vs OPS: அதிகபட்ச ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டம் எது? முழு ஒப்பீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ