7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு குறித்த சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி (டிஏ) உயர்வை அறிவிப்பதன் மூலம் நரேந்திர மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை போனான்ஸாவை கூடிய விரைவில் அறிவிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊடக அறிக்கைகளின்படி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இடையில் அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த நல்ல செய்தியை மத்திய அரசு அறிவிக்கக்கூடும். தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசாங்கம் அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 7வது மத்திய ஊதியக் குழுவின் (7th Central Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலா, டிஏவை உயர்த்துவதற்குப் பின்பற்றப்படும்.


46% அகவிலைப்படி (DA Hike) உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்:
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதிகரிப்புக்குப் பிறகு அகவிலைப்படி 46 சதவீதமாக இருக்கும். ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், ஆண்டு டிஏ உயர்வு ரூ.8640 ஆகவும், ரூ.56,900 அடிப்படை சம்பளத்தில் ஆண்டு டிஏ உயர்வு 27,312 ஆகவும் இருக்கும்.


மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள்


இதோ குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு


1. அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. தற்போதைய அகவிலைப்படி 42 சதவீதம் - அகவிலைப்படி உயர்வு மாதத்திற்கு ரூ.7,560
3. புதிய அகவிலைப்படி 46 சதவீதம் - அகவிலைப்படி உயர்வு மாதத்திற்கு ரூ.8,280
4. அகவிலைப்படி அதிகரிப்பு - ரூ 8,280- 7,560 = ரூ 720 மாதம்
5. ஆண்டு சம்பள உயர்வு ரூ 720 X 12= ரூ 8,640.


இதோ அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு


1. அடிப்படை சம்பளம் - ரூ 56900
2. தற்போதைய அகவிலைப்படி 42 சதவீதம் - மாதம் ரூ 23,898
3. புதிய அகவிலைப்படி 46% - அகவிலைப்படி உயர்வு மாதத்திற்கு ரூ.26,174
4. அகவிலைப்படி அதிகரிப்பு - ரூ 26,174 - ரூ 23,898 = ரூ 2,276 மாதத்திற்கு
5. அகவிலைப்படியில் ஆண்டு அதிகரிப்பு - ரூ 2,276 X 12 = ரூ 27,312.


அகவிலைப்படி உயர்வு மார்ச் 2023:
முன்னதாக கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி என்பது 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த அகவிலைப்படி சதவீதம் 42 சதவீதமாக அதிகரித்தது. தற்போதைய சூழலில் பணவீக்க விகிதம் அடிப்படையில் 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி சதவீதம் என்பது 46 என அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும்(டிஏ), ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் டிஏ நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு என்பது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி, ஜூலை என முன்தேதியிட்டு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தான் இந்த ஆண்டின் 2வது முறைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் தான் 7வது சம்பள கமிஷனின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி என்பது உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


மேலும் படிக்க | கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ