7வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் ஹோலி பண்டிகைக்கான பரிசை மத்திய மோடி அரசு வழங்கக்கூடும். மார்ச் 16-ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 31-ல் இருந்து 34 சதவீதமாக உயர்த்த அரசு முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முடிவின் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள். 3% அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் சம்பளம் ரூ.20,000 வரை உயரும்.


தற்போது மத்திய அரசு பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படுகிறது. தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) டிசம்பர் 2021 தரவின் படி, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ-வை அரசாங்கம் மூன்று சதவீதம் அதிகரிக்கக்கூடும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வு பற்றிய முக்கிய செய்தி, இந்த நாளில் அறிவிப்பு வெளியாகுமா? 


நாட்டின் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்துவிட்டன. 


இதைத் தொடர்ந்து 7வது ஊதியக் குழு-வின் பரிந்துரையின்படி, மார்ச் 16ம் தேதி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தால், அது அரசு ஊழியர்களுக்கு, மோடி அரசு வழங்கும் ஹோலிப் பரிசாக அமையும். 


34% அகவிலைப்படியில் கணக்கீடு


அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைபப்டி 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசும்போது, சம்பளத்தில்ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட், அரியர் கிடைக்குமா கிடைக்காதா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR