7வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு சமீபத்தில் ஒரு பெரிய செய்தியை வழங்கியது. ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், அகவிலைப்படியுடன் மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கக்கூடும் என தற்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த கொடுப்பனவுகளில் மிக முக்கியமான கொடுப்பனவு வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகும். இது விரைவில் அதிகரிக்கக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஹ்ஆர்ஏ அதிகரிக்கக்கூடும்


ஊடகச் செய்திகளின்படி, ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) அதிகரிக்கப்படலாம். இதற்குப் பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு ஏற்படும். அறிக்கைகளின்படி, எஹ்ஆர்ஏ-ன் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும். அதிகபட்ச எஹ்ஆர்ஏ விகிதம் 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படலாம். 


மேலும் படிக்க | April 1, 2022: இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய வரி விதிப்பு மாற்றங்கள் 


வீட்டு வாடகை கொடுப்பனவு வகை, X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி  உள்ளது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ வழங்கப்படுகிறது. Y பிரிவு ஊழியர்களின் ஹெச்ஆர்ஏ 18 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இருக்கும். Z வகுப்பின் ஹெச்ஆர்ஏ 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கும்.


அகவிலைப்படி அதிகரிக்கும் போது ஹெச்ஆர்ஏ திருத்தமும் நிகழ்கிறது


கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி 25% ஐத் தாண்டியதையடுத்து ஹெச்ஆர்ஏ-வும் திருத்தப்பட்டது. அரசாங்கம் 2021 ஜூலையில் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தியது. அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியவுடன்ஹெச்ஆர்ஏ தானே திருத்தப்படுகின்றது. தற்போது அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் அகவிலைப்படிக்குப் பிறகு, ஹெச்ஆர்ஏ-ன் அடுத்த திருத்தம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 


ஹெச்ஆர்ஏ எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
 


7வது ஊதியக்குழுவின் மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.56,900 ஆகும். அதன் ஹெச்ஆர்ஏ 27 சதவீதம் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது. இதை ஒரு எளிய கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம். 


ஹெச்ஆர்ஏ= ரூ. 56900 × 27/100 = மாதம் ரூ. 15363
ஹெச்ஆர்ஏ 30% ஆக  இருந்தால் = ரூ 56,900 × 30/100 = மாதம் ரூ 17,070
ஹெச்ஆர்ஏ-ல் மொத்த வேறுபாடு: மாதத்திற்கு ரூ 1707
ஆண்டு ஹெச்ஆர்ஏ அதிகரிப்பு: ரூ 20,484


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்ந்த பிறகு ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR