7வது ஊதியக்குழு அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாளை அதாவது மார்ச் 30ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கக்கூடும். இது தவிர, 18 மாத பாக்கிகள் குறித்தும் முடிவெடுக்கப்படலாம்.
இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம்
இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் 30 மார்ச் 2022 புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 3% டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அது அங்கீகரிக்கப்பட்டால், மார்ச் மாதத்திற்கான ஊழியர்களின் சம்பளத்துடன், புதிய டிஏ தொகையும் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். அகவிலைப்படி உயர்வுடன், ஜனவரி-பிப்ரவரி மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். அகவிலைப்படியில் மொத்தம் 3% அதிகரிப்பு இருக்கும். தற்போது, 31 சதவீதம் டிஏ வழங்கப்படுகிறது.
3% அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI இன்டெக்ஸ்) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீடு 351.33, சராசரியாக 34.04% ஆகும். ஆனால், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் குறைந்தது
அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ-ஐடபிள்யூ (தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பரில், இந்த எண்ணிக்கை 125.7 புள்ளிகளாக இருந்தது. டிசம்பரில் 0.24% குறைந்துள்ளது. ஆனால், இது அகவிலைப்படி உயர்வை பாதிக்கவில்லை. தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படுமா?
நவம்பரில் அதிகரிக்கப்பட்டது
தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவானது. இப்போது டிசம்பர் 2021 இன் எண்ணிக்கையில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2022 இல், 3 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. இப்போது 3 சதவீத உயர்வுக்குப் பிறகு இது 34 சதவீதத்தை எட்டும்.
ஜூலை 2021 முதல் டிஏ கணக்கீடு
ஜூலை 2021 - ஏஐசிபிஐ-353 - அகவிலைப்படி - 31.81%
ஆகஸ்ட் 2021 - ஏஐசிபிஐ-354 - அகவிலைப்படி - 32.33%
செப்டம்பர் 2021 - ஏஐசிபிஐ- 355- அகவிலைப்படி - 32.81%
நவம்பர் 2021 - ஏஐசிபிஐ - 362.016- அகவிலைப்படி - 33 %
டிசம்பர் 2021 - ஏஐசிபிஐ - 361.152 - அகவிலைப்படி - 34%
அகவிலைபப்டி எண்களின் கணக்கீடு
ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016
டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.4 X 2.88 = 361.152
34% அகவிலைப்படியில் கணக்கீடு
அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைபப்டி 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசும்போது, சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டில் பெரிய மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR