7th Pay Commission Latest: DA அதாவது அகவிலைப்படிக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை அளிப்பதற்கான எற்பாடுகளை மோடி அரசாங்கம் செய்து வருகிறது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில், சரியான நேரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்றும், ஆனால், அவ்வப்போது பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் அது தடைபடுகிறது என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தொழிலாளர் சங்கமான பாரதீய மஜ்தூர் சங்கத்தின் (BMS) தூதுக்குழுவுடனான சந்திப்பின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலைமையில் நேர்மையான முறையில் நடக்கும் நல்ல செயல்திறன் கொண்ட அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மை மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். தூதுக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு துறைகள் தொடர்பான சேவை விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய வகையில் பணி நட்பு சூழலை வழங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். இதுதொடர்பாக, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட 'மிஷன் கர்மயோகி' சீர்திருத்தத்தைப் பற்றியும் சிங் குறிப்பிட்டார்.


பணியாளர் அமைச்சகத்தின் ஒரு அறிக்கையின்படி, பதவி உயர்வு மற்றும் பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளின் பட்டியல் தொடர்பாக, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) பதவி உயர்வு செயல்முறையை எளிதாக்க முயற்சிக்கிறது. ஆனால் அவ்வப்போது பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால் இது தடைபட்டு வருகிறது.


ALSO READ: 7th Pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்ததை விட முன்னரே கிடைக்கும் DA Hike!!


அமைச்சகம் பல்வேறு குழுக்களின் ஊழியர்களை அணுக முயற்சிப்பதாகவும், இந்த பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுபட அவர்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் சிங் கூறினார். தற்போதைய சில பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு தனி குறிப்புகள் வழங்கப்பட்டன. இந்திய சர்வே துறை அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்தும் மெமோராண்டம் வழங்கப்பட்டது.


DA பற்றிய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஜனவரி மாதத்தில், ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தில் (DA மற்றும் DR) மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


கொரோனா மற்றும் அதனால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது ஹோலிக்கு முன்பு, ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.


தற்போது மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) DA 17% ஆக உள்ளது. அரசாங்கம் DA-ஐ அதிகரித்தால், இது சுமார் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 21 சதவீதமாக உயரும்.  


ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடித்தது Jackpot, இந்த மாதம் DA hike!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR