7th Pay Commission: செப்டம்பரில் பம்பர் உயர்வா? மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?
ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.
7th Pay Commission: நீண்ட காத்திருப்புக்கு பிறகு, ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.
ஆனால் 18 மாத நிலுவைத் தொகை கிடைக்காததால், மத்திய ஊழியர்கள் சில பின்னடைவுகளைப் பெற்றுள்ளனர். எனினும், இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நற்செய்தி கிடைத்துள்ளது.
அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்
இப்போது ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படி (Dearness Allowance) 28%-லிருந்து 31% ஆக உயரும். ஆனால் இது குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்பது பற்றிய தெளிவு இன்னும் இல்லை.
ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை
ஊழியர்கள் பணவீக்கத்திலிருந்து ஓரளவு நிவாரணம் பெற, அரசு விரைவில் 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. AICPI குறியீட்டின் தரவு வந்துவிட்டது. இந்த குறியீடு 121.7 ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021 க்கான அகவிலைப்படி 3% அதிகரிக்க உள்ளது. ஜூன் 2021 க்கான குறியீடு 1.1 புள்ளிகள் அதிகரித்து 121.7 ஆக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மாதமே முடிவு எடுக்கப்படலாம்
ஜூன் 2021 க்கான அகவிலைப்படி செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்படக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. அந்த அதிகரிப்பு செப்டம்பர் மாத சம்பளத்துடன் (Salary) கிடைக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. ஒன்றரை ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை மட்டுமல்லாமல், செப்டம்பரில் ஜூன் மாதத்துக்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால், அரசாங்கம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களின் அரியர் தொகையையும் வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் கூறியுள்ளது.
ஆனால், அரசாங்கம் ஒன்றரை வருட நிலுவைத் தொகையை வழங்க மறுத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021-க்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால், அது ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
அகவிலைப்படி 31% ஆக இருக்கும்
தரவுகளின் படி, அகவிலைப்படி 31.18 சதவிகிதமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. ஆனால், டிஏ-வின் கணக்கீடு ரவுண்ட் எண்ணாக செய்யப்படுகிறது. ஆகையால் இது 31%ஆக எடுத்துக்கொள்ளப்படும். இதுவரை, அகவிலைப்படி 28%ஆக இருந்தது. ஜூன் 2021 இல் டிஏ அதிகரிக்கப்பட்டவுடன் அது இப்போது 31 சதவீதமாக இருக்கும். இருப்பினும், இந்த அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்படும், எப்போது செலுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், செப்டம்பர் மாதத்துக்குள் அரசு ஊழியர்களுக்கு (Government Employees) நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
31% அகவிலைப்படியில் கணக்கீடு
இப்போது ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக மாறும். 7 வது ஊதியக்குழு மேட்ரிக்ஸ் படி, லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களின் சம்பள வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56900 வரை இருக்கும். இப்போது ரூ .18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த வருடாந்திர உதவித்தொகை ரூ .66,960 ஆக இருக்கும். ஆனால் உயர்வுக்குப் பிறகு, ஆண்டு சம்பள உயர்வு ரூ .30,240 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - மாதம் ரூ .5580
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - மாதம் ரூ. 3060
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு = 5580-3060 = ரூ .2520/மாதம்
5. ஆண்டு சம்பளத்தில் அதிகரிப்பு - 2520X12 = ரூ. 30,240
ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR